மங்கள கௌரி: இன்ஸ்டாவில் டான்ஸ் ரீல்ஸ் செய்து அசத்தும் பெண்மணி - hatersக்கு சொல்வதென்ன? ட்விட்டர்
இந்தியா

மங்கள கௌரி: இன்ஸ்டாவில் டான்ஸ் ரீல்ஸ் செய்து அசத்தும் பெண்மணி - hatersக்கு சொல்வதென்ன?

Keerthanaa R

மங்கள கௌரி. இந்த பெயரைக் கேட்டால், நமக்கு சொல்லிக்கொடுத்துள்ளதன் படி, 'குடும்ப பெண்ணின்' பெயர் போல தோன்றும்.

ஆனால் இவர் ஒரு சோசியல் மீடியா ஸ்டார் என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா?

இன்டெர்னெட்டும், சமூக ஊடகங்களின் வளர்ச்சியும், பலரது திறனை வெளிக்கொணர உதவியாக இருந்து வருகிறது. இது பலரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. குறிப்பாக பெண்களின் வாழ்க்கையை.

கொரோனா சமயத்தில் பல டான்சர்களையும், செஃப்களையும், பாடகர்களையும், எழுத்தாளர்களையும் அடையாளம் காட்டிக் கொடுத்தது இந்த சோசியல் மீடியா.

அந்த வரிசையில் உதயமான நாயகி தான் இந்த மங்கள கௌரி என்ற பெண். திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கு தாயானவர்.

இவரது நடன வீடியோ ஒன்றிற்கு இணையத்தில் பயங்கரமான டிரால்கள் வந்திருந்தது. அதற்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக மீண்டுமொரு நடன வீடியோவை வெளியிட்டிருந்தார் கௌரி.

பாப் பாடகி ரிஹான்னா

ஒரு சிகப்பு நிற புடவை அணிந்துகொண்டு, பாப் பாடகி ரிஹான்னாவின் "ரூட் பாய்" என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

அந்த ரீலில் ஓடிய எழுத்துகள் இவ்வாறு இருந்தன,

"நான் பிகினி அணிந்தாலும், புடவைக் கட்டியிருந்தாலும், அந்த ஆடைகளுக்குள் நீங்கள் என்னையே காண்பீர்கள். என் உடைக்கு ஏற்றவாறு நான் மாறப்போவதில்லை. எனது சௌகரியத்துக்கு என்ன வேண்டுமோ அதையே நான் அணியப்போகிறேன். உங்கள் கருத்தியல்களை அல்ல. நான் என்ன உடை அணிய வேண்டும் என எனக்கு சொல்லாதீர்கள்"

இந்த ரீல்ஸ் வைரலானது, மேலும் அப்பெண்ணின் துணிச்சலான பேச்சுக்காக அவரை பலரும் பாராட்டினர். இந்த சம்பவங்கள் எல்லாம் நடந்தது கடந்த மார்ச் மாதத்தில்.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து கௌரிக்கு பின்தொடர்பவர்கள் அதிகரித்தனர். குறைந்த காலத்தில் 52,000 ஃபாலோவர்களை கடந்தார். அப்போதிலிருந்து இவர் தன் சமூக வலைதள பக்கத்தில் தன் நடன வீடியோக்களை பதிவிடத் தொடங்கினார்.

சமயத்தில் தன் குழந்தைகளுடன் கூட நடனமாடி வீடியோக்களை பதிவிடுவார் கௌரி. இவருக்கு மூன்று குழந்தைகள். அப்படியிருக்கையில், இப்படி ஊரறிய நடனமாடுவது 'நல்ல பெண்ணுக்கு அழகல்ல, குடும்பத்தை கவனி' என்பது போன்ற விமர்சனங்கள் வந்தன. கௌரி அவற்றைப் பொருட்படுத்தவில்லை

கௌரி முறையாக நடனம் கற்றவர் அல்ல. கர்நாடகாவை சேர்ந்த இவர் 8 வயது முதல் சொந்த ஆர்வத்தால் சிடிக்களில் பாடல்கள் கேட்டு கேட்டு நடனமாடத் தொடங்கியவர்.

பெண்கள் திருமணம் ஆனாலும், தாயாகினாலும், அவர்களுக்கு என்று சில கனவுகள், இலக்குகள் இருக்கும் என்பதை தன் பார்வையாளர்களுக்கு தெரிவிக்க நினைப்பதாக கூறினார்.

"நான் ஏன் எனக்கு பிடித்ததை செய்யக்கூடாது? நான் இதை செய்வதால் மற்ற விஷயங்களில் கிடைக்காத திருப்தி கிடைக்கிறது" என்கிறார்.

தன்னைப்போல இருக்கும் பலருக்கு ஊகமளித்து, அவர்கள் திறனை வெளிக்கொண்டு வர உதவுவது தான் தன் இலக்கு என்றும் கூறுகிறார் மங்கள கௌரி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?