’’ ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு தேவையில்லை’’ - ஸ்மிருதி இரானி சொல்வதென்ன? Twitter
இந்தியா

'பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு தேவையில்லை' - ஸ்மிருதி இரானி சொல்வதென்ன?

Priyadharshini R

மாதவிடாய் காலங்களில் பெண்கள் நிறைய சிக்கல்களை எதிர்க்கொள்கிறார்கள், இதற்கு அரசு தரப்பில் சில முடிவுகள் எடுக்க வேண்டும் என மகளிர் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்த கோரிக்கை நேற்று மாநிலங்களவையிலும் பிரதிபலித்தது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் உறுப்பினர் மனோஜ் குமார் ஜா இது குறித்து மத்திய அரசுக்கு கேள்வியெழுப்பியிருந்தார்.

மாதவிடாய் விடுப்புக்கான சட்டத்தை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கிறதா என்ற கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்து பேசிய மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, "பெண்களுக்கு பணியிடங்களில் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்குவது தேவையற்றது" என்று கூறியுள்ளார்.

"மாதவிடாய் விடுமுறை, பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளுக்கு வழிவகுக்கும். மாதவிடாய் சுழற்சி என்பது ஒரு குறைபாடு அல்ல. அது பெண்களின் வாழ்வில் இயல்பானது, மாதவிடாயை சந்திக்கும் ஒரு பெண்ணாகவே இதை கூறுகிறேன்.

குறைந்த அளவிலான பெண்களே கடுமையான மாதவிடாய் வலியால் பாதிக்கப்படுகிறார்கள். இவை பெரும்பாலும் மருந்துகள் மூலம் சரி செய்யக்கூடியவையே" என்றார் அமைச்சர் ஸ்மிருதி இரானி

எனவே பெண்களுக்கு பணியிடங்களில் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்குவது தேவையற்றது என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மாநிலங்களவையில் தெரிவித்தார். இந்த கருத்தை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?