மிசோரமில் கட்டுமானத்தில் இருக்கும் ரயில்வே பாலம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மிசோரம் தலைநகரான ஐஸ்வால் பகுதியில் சைராங் ரயில் நிலையத்தின் அருகில் ரயில்வே பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
இன்று காலை சுமார் 10 மணியளவில் விபத்து ஏற்பட்டு, ரயில்வே பாலம் இடிந்து விழுந்தது. அந்த சமயத்தில் கட்டுமான பணியில் சுமார் 35 முதல் 40 பணியாளர்கள் இருந்ததாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
இந்த பாலமானது ஐஸ்வாலில் இருந்து சுமார் 21 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.
விபத்து நடந்தவுடன் காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு, மீட்புக் குழுக்கள் வரவழைக்கப்பட்டன.
விபத்துக் குறித்து மிசோரம் முதலமைச்சர் ஜொரோம்தாங்கா ட்விட்டரில் பதிவிட்டிருந்தார், மரணித்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்தவர், உதவ முன்வந்தவர்களுக்கு நன்றியையும் தெரிவித்திருக்கிறார்.
பிரதமர் மோடியும் தனது இரங்கலை தெரிவித்தார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதி மூலம் வழங்கப்படும் எனவும் அறிவித்திருக்கிறார்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust