"பில்கிஸ் பானு நடத்திய போராட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும்" - முதல்வர் ஸ்டாலின்  Twitter
இந்தியா

"பில்கிஸ் பானு நடத்திய போராட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும்" - முதல்வர் ஸ்டாலின்

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் "குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை.

Priyadharshini R

2002ம் ஆண்டும் குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பிறகான கலவரத்தின் போது பில்கிஸ் பானு என்ற பெண்மனி 11 பேர் உள்ள கும்பலால் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.

அந்த கும்பல் பில்கிஸ் பானுவின் குழந்தை உட்பட குடும்பத்தினர் 7 பேரைக் கொலை செய்தனர். நீண்ட காலம் நடந்த இந்த வழக்கில் கடந்த 2008ம் ஆண்டு 11 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

2022ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி தண்டனை குறைப்பு கொள்கையின் கீழ் இந்த 11 பேரையும் விடுதலை செய்தது குஜராத் அரசு. குஜராத் அரசின் இந்த முடிவை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் "குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. இந்த வழக்கு மகாராஷ்டிராவில் நடைபெற்றதால், மராட்டிய அரசு தான் 11 பேரின் விடுதலை குறித்து முடிவெடுக்க முடியும். எனவே, குற்றவாளிகளை விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்கிறோம் என தீர்பளித்தது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துள்ளார்.

“சகோதரி பில்கிஸ் பானு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, நீதி கேட்டு அவர் நடத்திய நெடும்பயணத்துக்குக் கிடைத்துள்ள வெற்றி. பாதிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஊக்கத்தையும், போராடும் மன உறுதியையும் தருவதாகும். அஞ்சாமலும் சலிப்பின்றியும் அவர் நடத்திய போராட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும்” என தெரிவித்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?