அம்மாவுடன் அஞ்சலி

 

Facebook

இந்தியா

கேரளா : 22 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக் கொண்ட தாயும் மகளும் - நெகிழ்ச்சி சம்பவம்

Antony Ajay R

ஒரு காப்பி தோட்டத்தில் 31 வயது இளம் பெண் கண்களில் கண்ணீர் பெருக ஓடி வந்து ஒரு மூதாட்டியைக் கட்டியணைத்துக்கொள்ளும் காட்சி நம் தினசரி வாழ்வில் காணக் கூடியதல்ல. ஆனால் இளமைக் காலம் முழுவதையும் காப்பி தோட்டத்தில் கழித்த தன் அம்மா சித்ராவைக் கண்ட போது அஞ்சலி அதைத்தான் செய்தார்.

சித்ரா மற்றும் காளிமுத்து தம்பதிக்கு 5 வது குழந்தையாகப் பிறந்தவர் அஞ்சலி. அஞ்சலியின் பெற்றோர் காப்பி தோட்டத்தில் வேலை செய்வதற்காக தமிழ்நாட்டில் இருந்து குடிபெயர்ந்து கர்நாடகத்தில் உள்ள முடிகிரே என்னும் ஊருக்கு வந்தனர்.

கேரளாவிலிருந்து மர வியாபாரிகள் முடிகெரே வந்து மரம் வாங்கி செல்வது வழக்கம். அவ்வாறு வருபவர்கள் மரங்களைத் தூக்கிச் செல்ல யானைகளையும் பாகன்களையும் அழைத்து வருவார்கள். அவர்கள் குடும்பத்துடன் வந்து தங்கி தங்கள் வேலைகளைச் செய்வார்கள் அப்போது, பாகன்கள் வீட்டுக் குழந்தைகளும் காப்பி தோட்டத்தில் வேலை செய்பவர்களின் குழந்தைகளும் இணைந்து விளையாடுவார்கள். அப்படி விளையாடிக்கொண்டிருந்த ஒரு நாளில் தான் அந்த துயர சம்பவமும் நடந்தது.

காப்பித்தோட்டம் - சித்தரிப்புக்காக


22 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை இப்போது நினைவு கூறும் போது அவர் முகம் வாடுகிறது. “ஒரு நாள் அஞ்சலியை காணவில்லை என ஊரெங்கும் தேடிப்பார்த்தோம். அவள் போகும் வரும் பாதையெங்கும் எங்களால் முடிந்த வரைத் தேடினோம். அவள் கிடைக்கவில்லை. அவள் பாகன் குடும்பத்தினருடன் சென்றதைப் பார்த்ததாகச் சிலர் கூறினார்கள்” என்கிறார் அஞ்சலியின் தாய் சித்ரா.

பாகன் குடும்பத்தினருடன் கேரளம் சென்ற அஞ்சலி அங்கு வீட்டு வேலைகளைச் செய்து வாழ்ந்திருக்கிறார். பின்னர் வளர்ந்ததும் நெல்லமணி சஜி என்பவரைத் திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு கணவர் சஜியிடம் தனது குடும்பத்தைப் பற்றி கூறியிருக்கிறார் அஞ்சலி. அஞ்சலியின் குடும்பத்தினரைக் கண்டுபிடிக்க வேண்டும் என நினைத்த சஜி கோழிகோடில் உள்ள தன் நண்பர்களுடன் தேட தொடங்கியிருக்கிறார். அவர்கள் மூலம் முடிகிரே-வில் உள்ள சமூக ஆர்வலர் மோனு என்பவரைக் கண்டறிந்து அவரிடம் தன் மனைவியின் கதையை பகிர்ந்திருக்கிறார்.

சித்தரிப்புக்காக

சஜி அளித்த தகவகல்கள் அடிப்படையில் முடிகிரே-வில் மோனுவின் நண்பர்களாய் இருக்கும் காப்பி தோட்ட உரிமையாளர்களிடம் விசாரித்து சில நாட்களுக்கு முன் சித்ரா என்ற வயதான பெண்ணை கண்டுபிடித்திருக்கிறார்.

சித்ராவிடம் அவரது மகள் குறித்த தகவல்களைக் கேட்டறிந்தபோது அது சஜி கூறிய அஞ்சலியின் கதையுடன் ஒத்துப்போனதால், அந்த பெண்மணியைப் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்து சஜிக்கு அனுய்ப்பியிருகிறார்.

வீடியோ காட்சிகளைப் பார்த்த அடுத்த கணத்தில் கேரளத்திலிருந்து கிளம்பி தன் அம்மாவைப் பார்க்க விரைந்தார் அஞ்சலி. அவர் முடிகிரே-வில் தான் சிறுவயதிலிருந்த காப்பி தோட்டத்தில் அவர் அம்மவை பார்த்த கணத்தில் கட்டியணைத்ததுள்ளார். அவரது கணவரையும் அவர் அம்மாவாக இருக்கும் மூன்று குழந்தைகளையும் அறிமுகப்படுத்தினார்.

சித்ரா தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இப்போது தனியாக வாழ்ந்துவரும் சித்ரா-வின் மற்ற மகன்களும் மகள்களும் வேறு காப்பித் தோட்டங்களுக்கு வேலை செய்யக் குடிபெயர்ந்துவிட்டனர்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?