மனி ஆர்டர் canva
இந்தியா

மனி ஆர்டர் மூலம் பணம் அனுப்பிய சகோதரன்; 4 வருடங்கள் கழித்து வந்து சேர்ந்த வினோதம்!

Keerthanaa R

கடந்த 2018ல் தன் சகோதரன் அனுப்பிய மனி ஆர்டர், நான்கு வருடங்கள் கழித்து சகோதரியிடம் வந்து சேர்ந்துள்ள சம்பவம் ஒடிசாவில் நிகழ்ந்துள்ளது.

சுமித்ரா சுந்தர்கர் மாவட்டம் ஒடிசாவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு பிரமோத் குமார் என்ற சகோதரர் இருக்கிறார்

ரூர்கேலாவில் வசித்துவரும் பிரமோத் தன் சகோதரிக்கு ரூ.500 மனி ஆர்டர் அனுப்பியுள்ளார். இந்த பணத்தை அவர் கடந்த மே 9, 2018ஆம் ஆண்டு, சாவித்திரி விரத பூஜைக்காக அனுப்பிவைத்துள்ளார்.

ஆனால், அந்த தொகை சுமித்ராவை வந்தடையவில்லை. நான்கு ஆண்டுகள் கழித்து, கடந்த சனிக்கிழமை சுமித்ராவுக்கு இந்த பணம் கிடைத்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட ரூர்கேலா அஞ்சல் துறை அதிகாரி, உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்

திடீரென சகோதரனிடம் இருந்து பணம் வந்ததால் முதலில் குழப்பமடைந்த சுமித்ரா, பின்னர் சகோதரரை தொடர்புகொண்டு இது பற்றி கேட்டுள்ளார்.

நான்கு வருடங்களுக்கு முன்னர் நடந்ததால், முதலில் பிரமோதுக்கும் என்ன காரணத்திற்காக பணம் அனுப்பினார் என்பது மறந்திருந்தது. சிறிது நேரம் கழித்து தான், பண்டிகைக்காக அந்த பணத்தை அவர் அனுப்பியது நினைவுக்கு வந்துள்ளது.

சுமித்ரா இருக்கும் ஊரின் புதிய போஸ்ட்மாஸ்டர், அந்த மனி ஆர்டர் டுரிய நபருக்கு சென்று சேராமல் இருந்ததால், முதலில் அதை கொண்டு சேர்க்கும்படி உத்தரவிட்டார். அப்போது தான், பணம் சுமித்ராவின் கைகளில் வந்தடைந்தது.

நான்கு வருடங்களாக அந்த பனம் போஸ் ஆபீஸிலேயே இருந்து வந்துள்ளது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?