Eiffel Tower Pexels
இந்தியா

Morning News Today: துருபிடித்து கிடக்கும் ஈபிள் டவர் - 20வது முறையாக வண்ணம் பூசப்படுமா?

பழுதுபார்ப்புக்கு பதிலாக ஈபிள் கோபுரம் வெறுமென வண்ணம் மட்டும் பூசப்படவிருக்கிறது. 2024-ம் ஆண்டு பாரிஸில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியையொட்டி 60 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.489 கோடி) செலவில் ஈபிள் டவர் வண்ணம் பூசப்படுவதாகக் கூறப்படுகிறது

Keerthanaa R

ஈபிள் டவர் துருப்பிடித்ததால் வண்ணம் பூசப்படுகிறதா?


பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குஸ்டாவ் ஈபிள் என்பவரால் கட்டப்பட்ட உலகப்புகழ் பெற்ற ஈபிள் டவர் அமைந்துள்ளது. முற்றிலும் இரும்பினாலான இந்த கோபுரம் 1,063 அடி உயரம் கொண்டது. ஈபிள் டவர், உலகில் அதிக பேரால் பார்வையிடப்பட்ட சுற்றுலா தளங்களில் ஒன்று. ஈபிள் டவர், துருப்பிடித்து மோசமான நிலையில் இருப்பதாகவும், முழுமையான பழுதுபார்ப்பு தேவை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் பழுதுபார்ப்புக்கு பதிலாக ஈபிள் கோபுரம் வெறுமென வண்ணம் மட்டும் பூசப்படுவதாகவும் நிபுணர்கள் ரகசிய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றனர்.

2024-ம் ஆண்டு பாரிஸில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியையொட்டி 60 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.489 கோடி) செலவில் ஈபிள் டவர் வண்ணம் பூசப்படுவதாகக் கூறப்படுகிறது. ஈபிள் டவர் இப்படி மீண்டும் வண்ணம் பூசப்படுவது இது 20-வது முறை என நிபுணர்களின் ரகசிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக பொதுக்குழு மேல்முறையீடு வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை

OPS - EPS

ஜூன் 23-ம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. அந்த வழக்கின் விசாரணை இன்று, நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, கிருஷ்ண முராரி அடங்கிய அமர்வில் நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கட்சியின் பொருளாளர் ஆன ஓ.பன்னீர்செல்வம் கட்சி நிதியை விடுவிக்காததால் ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்க முடியாத நிலை உள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி இடைத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கும் ஓ.பன்னீர்செல்வம் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை, என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ள அதிமுக -வின் பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிவை குறித்தும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சமயபுரம் மாரியம்மன் கோயில்: ராஜகோபுரத்திற்கு இன்று மகா கும்பாபிஷேகம்

பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலின் கிழக்குப் பக்கத்தில் உள்ள ராஜகோபுரம் ரூ. 2.5 கோடியில் சுமார் 30 அடி உயரத்தில் கல்காரம் கட்டும் பணிகள் நடந்திருக்கின்றன. மேலும் கோயிலின் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டன. இந்நிலையில்,ராஜகோபுரம் கட்டும் பணி மேலும் காலதாமதம் ஆகும் என்பதால் முதல் கட்டமாக வடக்கு, தெற்கு,மேற்கு பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட கோபுரங்களுக்கு கடந்த 2017 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து, விரைவில் ராஜகோபுரத்தின் கட்டுமான பணிகளை முடித்து கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து இருந்தனர். இதையடுத்து திட்ட மதிப்பீடு செய்து 73 அடி உயரத்தில் 7 நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடந்தது.

விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்

ஜோகோவிச்

லண்டனில் நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலியின் ஜானிக் சின்னருடன் மோதினார். இதில் முதல் இரு செட்களை 7-5, 6-2 கைவிட்ட, ஜோகோவிச் அதிரடியாக ஆடி 6-3, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் அடுத்த 3 சுற்றுகளை வென்று ஜோகோவிச் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?