கனட அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ

 

Twitter

இந்தியா

Morning News Wrap: தலைமறைவான கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ - முக்கிய செய்திகள்

Antony Ajay R

கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமறைவு

கனடாவில் கொரோனா தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் கட்டாய தடுப்பூசி எதிர்ப்பு தெரிவித்து மக்கள் மிகப்பெரிய அளவில் திரண்டு போராட்டத்தை நடத்தி வருகின்றர்.

இதனால், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினர் தமது வீட்டிலிருந்து வெளியேறி ரகசிய இடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

கடும் குளிர் நிலவி வரும் சூழலிலும் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் ஊடுருவியுள்ளதால், வன்முறைக்கான அபாயமும் அங்கு ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருப்பதுடன், பாதுகாப்பும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏவுகனை சோதனை

வட கொரியா 7 வது முறையாக ஏவுகனை சோதனை

வட கொரியா இம்மாதம் ஆறு முறை ஏவுகணை சோதனை நடத்தியிருந்த நிலையில், 2017க்கு பின் மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணையை ஏழாவது முறையாக நேற்று சோதனை செய்தது.

. ஒரு புறம் அண்டை நாடுகளான தென் கொரியா, ஜப்பான் ஆகியவற்றை மிரட்டவும், அந்நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்கா விதித்துள்ள தடையை அகற்றவும், வட கொரியா ஏவுகணை சோதனைகளை அடிக்கடி நடத்துவதாகக் கூறப்படுகிறது. இந்த மாதத்தில் மட்டும் வட கொரியா ஆறு முறை ஏவுகணை சோதனைகளை நடத்தி உள்ளது.

இந்நிலையில் ஏழாவது முறையாக மேலும் ஒரு ஏவுகணை சோதனையை நேற்று நடத்தியது. அண்டை நாடுகளின் பிராந்திய பகுதிகளைத் தவிர்ப்பதற்காக, உயரமான இடத்திலிருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டது. அதிகபட்சமாக 2,000 கி.மீ., உயரம் பறந்த ஏவுகணை பின், கடலில் விழுந்ததாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.'கடந்த 2017க்கு பின் வடகொரியா சோதித்துப் பார்க்கும் மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணை இது' எனக் கூறப்படுகிறது.

நிர்மலா சீத்தாராமன்

இன்று முதல் பட்ஜெட் கூட்டத்தொடர்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் (2022-23ஆம் நிதியாண்டு) இன்று கூடுகிறது. இந்த கூட்டத் தொடர் முதல் கட்டமாக ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்டமாக மார்ச் 14 முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரையும் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். இதைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, பிப்ரவரி 1ஆம் தேதி காலை 11 மணிக்கு 2022-23ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். இந்த ஆண்டும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.

உடுமலைப்பேட்டை தாயம்மாள்

பிரதமர் பாராட்டிய உடுமலைப்பேட்டை தாயம்மாள்

இந்தாண்டின் முதல் மன்கி பாத் நிகழ்ச்சியில் நேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் குறித்து பிரதமர் பேசினார்.

அவரது உரையில் திருப்பூரைச் சேர்ந்த இளநீர் விற்கும் பெண் ஒருவரையும் பாராட்டி பேசினார். அவர், "நாம் அனைவரும் நமது கடமைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கோடிக்கணக்கான இளைஞர்களை கொண்ட இந்திய திருநாட்டால் முடியாதது என எதுவும் இல்லை. இளைஞர்களைக் கொண்ட நாட்டினால் எதனையும் சாதிக்க முடியும் என நான் நம்புகிறேன். தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வசிக்கும் தாயம்மாள் என்ற பெண்னின் செயல் நம் அனைவருக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது.

அவருக்கு சொந்தமாக எந்த நிலமும் இல்லை. பல ஆண்டுகளாக, இளநீர் விற்றே அவரது குடும்பம் வாழ்ந்து வருகிறது. அவரது குழந்தைகள் சின்னவீரம்பட்டி பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். அந்த பள்ளியின் உள்கட்டமைப்பை மேற்கொள்ள இளநீர் விற்றதன் மூலம் கிடைத்த ரூ.1 லட்சத்தைப் பள்ளிக்கு நன்கொடையாக தாயம்மாள் அளித்தார். இதனை செய்வதற்கு மிகப்பெரிய மனதும், மிகப்பெரிய சேவை செய்யும் மனதும் தேவை” என்றார்.

ரஃபேல் நடால்

21-வது கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற ரஃபேல் நடால்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் பிரிவு இறுதிப் போட்டியில், ரஷ்யாவின் மெத்வதேவை ரசிகர்களை சிலிர்க்கவைத்த ஆட்டத்தில் வீழ்த்திய ஸ்பெயினின் ரஃபேல் நடால், 21-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் சூடி, டென்னிஸ் உலகில் புதிய சரித்திரத்தை எழுதினார். 5 மணி 24 நிமிடங்கள் வரை நீடித்த இந்த காத்திரமான ஆட்டத்தில், நடால் 2-6, 6-7(5), 6-4, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தினார்.

டென்னிஸ் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து படைத்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில், ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ் - ஸ்பெயினின் ரஃபேல் நடால் மோதினர். இதுவே 2022-ம் ஆண்டின் மறக்க முடியாத முதல் டென்னிஸ் போட்டியாகவே ரசிகர்களுக்கு அமைந்தது.

கடைசியாக 2020 பிரெஞ்ச் ஓபனுக்கு பிறகு பாதத்தில் ஏற்பட்ட காயத்தால் ஆறு மாதங்கள் நடாலால் விளையாட முடியவில்லை. இந்த வருட தொடக்கத்தில் விளையாட ஆரம்பித்தார். ரோஜர் பெடரர், ஜோகோவிச், நடால் மூவரும் தலா 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர்களில் முதலிடத்தில் இருந்தனர். இந்த ஆண்டில் இதுவரை தோல்விகளை சந்திக்காமல் 10 வெற்றிகளைப் பெற்றுள்ள நடால், 21-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று புது வரலாறு படைத்தார்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?