கணக்கு தேர்வில் zero வாங்கிய மகள் - அம்மா என்ன செய்தார் தெரியுமா? வைரல் ட்விட்டர் பதிவு ட்விட்டர்
இந்தியா

கணக்கு தேர்வில் zero வாங்கிய மகள் - அம்மா என்ன செய்தார் தெரியுமா? வைரல் ட்விட்டர் பதிவு

Keerthanaa R

பரிட்சையில் தோல்வியடைந்த தனக்கு அவரது தாய் அளித்த ஊக்கம் அவரை பின்னாளில் சிறந்த மாணவியாக மாற்றியது என்று தனது கதையை பகிர்ந்திருக்கிறார் ட்விட்டர் பயனர் ஒருவர்.

சிறு வயதில், தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் எடுக்கவில்லை என்றால், நம் வீடுகளில் பூகம்பமே வெடிக்கும். அடுத்த தேர்வில் நல்ல மார்க் எடுக்கும் வரை, விளையாட்டு, டிவி, பிடித்த ஸ்நாக்ஸ், அவுட்டிங் என அனைத்தும் கட்.

போதாக்குறைக்கு அடுத்த தேர்வு ரிசல்ட் வரும்வரை வசைபாடுவார்கள். பல நாட்கள் நாம் அழுதுகொண்டே கணக்கு பாடம் எழுதியதெல்லாம் நினைவில் இருக்கிறதா?

ஆனால் இங்கு ஒரு பெண் தன் மகள் எக்சாமில் கம்மியான மார்க் வாங்கியிருந்தாலும், அவருக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக பரிட்சை தாளில் எழுதியுள்ள செய்திகள் நெகிழ்ச்சியாக உள்ளன.

செய்னாப் என்ற ட்விட்டர் பயனர் தனது கணக்கு பாட தேர்வு பேப்பர்களை பகிர்ந்திருந்தார். அதில் செய்னாப் 15க்கு பூஜ்ஜியம் மார்க் எடுத்திருக்கிறார். அதை அவரது அம்மாவிடம் காட்ட, அம்மாவோ வழக்கமாக நம் வீடுகளில் நடப்பது போல களேபரம் செய்யவில்லை.

மாறாக அதில் தன் மகளுக்கு நேர்மறை வார்த்தைகளை எழுதியுள்ளார்.

”அன்பு மகளே, இந்த மதிப்பெண்ணை ஏற்றுக்கொள்ள தைரியம் வேண்டும். நீ தைரியமானவள்” என்ற அர்தத்தில் குறுஞ்செய்தி எழுதியிருந்தார்.

செய்னாப் இதன் புகைப்படத்தை பகிர்ந்து அவரது தாயாரின் ஊக்குவிக்கும் வார்த்தைகள் எப்படி கணக்கு பாடம் மீது தனக்கு ஆர்வத்தை அதிகரித்தது என்றும், எவ்வாறு பின்னாட்களில் சிறப்பாக படித்து நல்ல மதிப்பெண்கள் பெற வைத்தது என்பதையும் கூறியிருந்தார்.

ஒருவர் நமது மோசமான சூழ்நிலையில் நம்மிடம் பேசும் நேர்மறையான, சரியான வார்த்தைகள் நம் வாழ்க்கையின் போக்கை எப்படி மாற்றும் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?