Dhoni: இணையத்தில் வைரலாகும் தோனியின் 11 ஆண்டு பழைய ஆஃபர் லெட்டர் - மாத சம்பளம் எவ்வளவு? Instagram
இந்தியா

Dhoni: இணையத்தில் வைரலாகும் தோனியின் 11 ஆண்டு பழைய ஆஃபர் லெட்டர் - மாத சம்பளம் எவ்வளவு?

இந்நிலையில், 2012 ஆம் ஆண்டு தோனிக்கு இண்டியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் வழங்கப்பட்ட வேலைக்கான ஒப்பந்த கடிதத்தை இந்திய தொழிலதிபர் லலித் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

Keerthanaa R

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனியின் 11 ஆண்டு பழைய ஆஃபர் லெட்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் அவரது மாதச் சம்பளம் பற்றிய விவரங்கள் குறிப்பிட்டுள்ளது இணையவாசிகளின் கவனத்தை பெற்றுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் வீரரும், கேப்டனும் ஆவார் எம் எஸ் தோனி. இவர் இந்திய அணிக்காக பல கோப்பைகளை வென்று தந்தவர். இதனால் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். இவரை பற்றிய சிறிய தகவலும் அதிக மக்களை எளிதில் கவரும்.

இந்நிலையில், 2012 ஆம் ஆண்டு தோனிக்கு இண்டியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் வழங்கப்பட்ட வேலைக்கான ஒப்பந்த கடிதத்தை இந்திய தொழிலதிபர் லலித் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அந்த ஆஃபர் லெட்டரின் புகைப்படத்தை வெளியிட்ட லலித் மோடி, கீழே கேப்ஷனில் ”பிசிசிஐ இன் அவமதிக்கும் வழக்கம் இந்தியாவில் மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எனக்கு இது புதிராக உள்ளது. உண்மையில் இது தோனியின் நியமன கடிதமா?

ஆண்டுக்கு அவர் 100 கோடிகளில் சம்பாதிக்கிறார். அவர் ஏன் ஸ்ரீனிவாசனின் நிறுவனத்தில் பணியாற்றவேண்டும்? இது போல இன்னும் நிறைய ஒப்பந்த கடிதங்கள் இருக்கும் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இண்டியா சிமெண்ட்ஸ் நிறுவனம் பிசிசிஐ -ன் தற்போதைய தலைவர் ஸ்ரீனிவாசனுடையது தான். தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2008ஆம் ஆண்டு வாங்கப்பட்டார்.

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு 2012வாக்கில் அவருக்கு இண்டியா சிமெண்ட்சில் மார்க்கெட்டிங் துறையில் துணை தலைவர் பதவி Vice President - வழங்கப்பட்டது. இதே ஆண்டு தான் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் ஒப்பந்த காலம் முடிவடைந்திருந்த நிலையில், அவரை ரூ.8.8 கோடிக்கு அணியில் தக்கவைத்தது. சென்னை சூப்பர் கிங்ஸின் தலைவரும் ஸ்ரீனிவாசன் தான்.

தனது இந்த பதிவில் தோனி மற்றும் ஸ்ரீனிவாசனை வைத்து கலாய்த்து சில மீம்ஸ்களையும் பகிர்ந்திருந்தார் லலித் மோடி

என்னதான் லலித் மோடி பிசிசிஐ மீது காட்டம் தெரிவித்திருந்தாலும், இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்தது என்னவோ தோனியின் சம்பள விவர பட்டியல் தான்.

லலித் மோடி பிசிசிஐ இல் பணியாற்றிய போது லஞ்சம் மற்றும் பண மோசடி போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைத்து இடைநீக்கம் செய்தது, பின்னர் அவர் லண்டனுக்கு தப்பியோடிய விவரங்கள் நாம் அறிந்ததே...

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?