MS Dhoni: ரூ.83 லட்சத்திற்கு ஏலம் போன தோனியின் 2011 உலகக்கோப்பை ஃபைனல் பேட்! twitter
இந்தியா

MS Dhoni: ரூ.83 லட்சத்திற்கு ஏலம் போன தோனியின் 2011 உலகக்கோப்பை ஃபைனல் பேட்!

Keerthanaa R

2011 கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், எம் எஸ் தோனி பயன்படுத்திய பேட் ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த பேட்டினை ரூ.83 லட்சத்திற்கு ஏலத்தில் விற்றுள்ளனர். இதுவே உலகில் அதிக விலைக்கு ஏலம் விடப்பட்ட பேட்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி. கேப்டனாக 2007ல் பதவி ஏற்றவர் முதன் முதலில் 20 ஓவர் உலகக்கோப்பையை இந்திய அணிக்காக வென்று தந்தார். அதன் பிறகு இவரது தலைமையில் இந்திய அணி 2011ல் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடியது.

28 ஆண்டுகளுக்கு பிறகு 2011ல் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றது. இந்த போட்டியில், தோனியின் பங்களிப்பு வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது. குறிப்பாக இவர் அடித்த அந்த சிக்ஸர் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த காட்சியாகும்.

இந்நிலையில், தோனி இந்த இறுதிப்போட்டியில் பயன்படுத்திய பேட் ஏலம் விடப்பட்டது. இந்தியா உலகக்கோப்பையை வென்ற அதே வருடம், ஜூலை மாதம் இங்கிலாந்தில் ஈஸ்ட் மீட்ஸ் வெஸ்ட் என்ற அறக்கட்டளை சாரிட்டி டின்னர் நிகழ்ச்சி ஒன்றினை நடத்தியது.

அந்த நிகழ்ச்சியில் தான் தோனியின் பேட் ஏலம் விடப்பட்டது. அந்த ஏலத்தில் தோனி பயன்படுத்திய பேட்டானது 100,000 பௌண்டுகள், அன்றைய நிலவரப்படி இந்திய மதிப்பில் 83 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளது.

ஆர் கே க்ளோபல் ஷேர் அண்ட் செக்யூரிட்டிஸ் லிமிட்டட் என்ற நிறுவனம் தான் இந்த பேட்டினை சொந்தமாக்கியது. உலகில் அதிக விலைக்கு ஏலம் சென்ற பேட் என்ற கின்னஸ் உலக சாதனைகள் அங்கீகாரமும் கிடைத்தது.

இந்த தொகையை தோனியின் மனைவி சாக்‌ஷி நடத்தும் அறக்கட்டளையின் மேம்பாட்டுக்காக பயன்படுத்தியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோனி ரீபாக் நிறுவனத்தின் பேட்டினை பயன்படுத்தியிருந்தார். இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு இந்நிறுவனத்தின் விற்பனை சூடுபிடித்தது குறிப்பிடத்தக்கது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?