Mukesh Ambani
Mukesh Ambani Twitter
இந்தியா

முகேஷ் அம்பானி : அதிர வைக்கும் 75 பில்லியன் டாலர் திட்டம் - என்ன நடக்கிறது?

NewsSense Editorial Team

இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய பணக்காரராக வலம் வந்து கொண்டிருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, அடுத்து பசுமை எரிசக்தி துறையில் தன் கவனத்தை செலுத்த இருப்பதாக செய்திகள் வெளியானது.

சமீபத்தில் தான் தன்னுடைய பல நிறுவனங்களுக்கு தன்னுடைய வாரிசுகளை தலைமை பொறுப்பில் அமர வைத்ததைப் பார்த்தோம்.

முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவராகவும், இஷா அம்பானி ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தின் செயல்பாடுகளையும், இளைய மகன் ஆனந்த் அம்பானி எரிசக்தி துறையையும் கவனித்துக் கொள்கிறார்கள்.

Akash Ambani

அடுத்த சில தசாப்தங்களில் பசுமை எரிசக்தி துறை மிகப் பெரிய அளவில் வளரும், அதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கால் பதிக்க வேண்டும் என்று சுமார் 65 வயதான முகேஷ் அம்பானி எதிர்பார்ப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

எனவே இந்த பசுமை எரிசக்தி துறையில் வணிகத்துக்கு தேவையான வழிகளை வகுப்பது, பிரம்மாண்டமான ஆலைகளை கட்டமைப்பது, ப்ளூ ஹைட்ரஜன் தொழிற்சாலைகளை உருவாக்குவது, எந்த நிறுவனங்களை எல்லாம் கைப்பற்றினால் எதிர்காலத்தில் நன்றாக இருக்கும் என்கிற மதிப்பீடுகளை மேற்கொள்வது,

இந்த புதிய பசுமை எரிசக்தி துறையில் யாரெல்லாம் முதலீடு செய்ய வாய்ப்பு இருக்கிறது என்பதை அறிந்து அவர்களோடு பேச்சு வார்த்தைகளை மேற்கொள்வது என பல விஷயங்களைச் செய்யவிருப்பதாக என் டி டிவி வலைதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த விஷயங்கள் குறித்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் இதுவரை வெளியாகவில்லை.

இருப்பினும், தொழில்துறையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் முகேஷ் அம்பானியை தொடர்ந்து கவனித்து வரும் சிலர் தங்கள் வலைதளங்களில் கூறியுள்ளதாக என் டி டி வி தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு பசுமை எரிசக்தி திட்டங்களுக்கு, அடுத்த 15 ஆண்டுகளில் சுமார் 75 பில்லியன் அமெரிக்க டாலரை செலவழிக்க இருப்பதாக பல திட்டங்களை முகேஷ் அம்பானி முன்மொழிந்ததும் இங்கு நினைவு கூறத்தக்கது.

திருபாய் அம்பானி

தன்னை நிரூபித்த முகேஷ் அம்பானி

அம்பானி 1990களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கீழ், உலகின் மிகப்பெரிய பெட்ரோ கெமிக்கல் சுத்திகரிப்பு ஆலையை உருவாக்க, பல மாதங்கள் கண்டெய்னர்களில் தங்கி வேலை பார்த்தது இங்கு நினைவு கூறத்தக்கது.

அதேபோல கடந்த 2016 ஆம் ஆண்டு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டெலிகாம் சந்தைக்குள் தன் வலது காலை எடுத்து வைத்தது.

ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தை தொடங்கி இந்தியாவின் நம்பர் 1 வயர்லெஸ் நெட்வொர்க் என்கிற இடத்தை பிடிக்க கிட்டத்தட்ட 50 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்தது.

அதுபோக அமெரிக்காவின் பல முன்னணி நிறுவனங்களான மெட்டா பிளாட்பார்ம்ஸ் இன்க், கூகுள் போன்ற பல பிரபல நிறுவனங்களிடமிருந்து சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடாக பெற்றதும் இங்கு நினைவு கூறத்தக்கது.

இப்படி முதலீடுகளை சுண்டி இழுத்ததன் காரணமாகத்தான் 2016ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் சேவை, அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளிலேயே இந்தியாவின் மிகப்பெரிய சேவையாக உருவெடுத்தது.

பசுமை எரிசக்தி அல்லது மரபுசாரா எரிசக்தி:

இப்போது முகேஷ் அம்பானி தன் கவனத்தை பசுமை எரிசக்தி துறையை நோக்கி திருப்பி இருக்கிறார். ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரராக திகழும் கௌதம் அதானி, பசுமை எரிசக்தி மற்றும் மரபுசாரா எரிசக்தி துறையில் மிகப்பெரிய முதலீடுகளை மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மிடில் ஈஸ்டன் ஃபண்ட்ஸ் (Middle Eastern Funds) உட்பட பல்வேறு பெரும் முதலீட்டாளர்களை அணுகி இந்தியாவின் எரிசக்தி துறையில் முதலீடு செய்யுமாறு பேச்சு வார்த்தை நடத்தி இருப்பதாக இருவர் என் டி டிவி வலைதளத்திடம் கூறியுள்ளனர்.

இந்திய டெலிகாம் சந்தையில் எப்படி ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் காலடி எடுத்து வைத்த நாள் முதல் இன்று வரை கலக்கிக் கொண்டிருக்கிறதோ, அப்படி இந்தியாவின் பசுமை எரிசக்தி துறையிலும் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்து அத்துறையின் வியாபாரத்தில் முன்னணியில் இருக்க விரும்புவதாக சிலர் கூறியுள்ளனர்.

பசுமை எரிசக்தி துறையின் விநியோகத்தில் இருக்கும் எல்லா இடங்களிலும் (இணைப்புச் சங்கிலிகளிலும்) ரிலையன்ஸ் நிறுவனம் இருக்கும் என்பதால், கிடைக்கும் லாப வரம்பு அதிகமாக இருக்கும் என்பதையம் சொல்லி வருகிறார்கள்.

வாய்ப்பு:

பொதுவாகவே உலகின் பல முன்னணி நிறுவனங்களும் சுற்றுச்சூழல் பிரச்னைகளை மையமாகக் கொண்டு தங்களுடைய நிறுவனம் ஒரு குறிப்பிட்ட ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வுக்கு (Net Zero Carbon Emission) நகரும் என்று கூறுவர்.

அப்படி ரிலையன்ஸ் நிறுவனம் 2035ஆம் ஆண்டுக்குள் இந்த நிலையை அடைய இலக்கு நிர்ணயித்திருக்கிறது.

அதோடு இந்தியாவும் மரபுசார் எரிபொருட்களில் இருந்து மரபுசாரா எரிபொருளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த மாற்றத்தில் கிடைக்கும் வாய்ப்பை ரிலையன்ஸ் நிறுவனம் பயன்படுத்திக் கொண்டால் அடுத்த சில தசாப்தங்களுக்கு நல்ல வளர்ச்சி காணலாம் என கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் ரிலையன்ஸ் நிறுவன பங்குதாரர்கள் கூட்டத்தில் முகேஷ் அம்பானி கூறியது இங்கு நினைவு கூறத்தக்கது.

மறுபக்கம் கௌதம் அதானியோ, மரபுசாரா எரிசக்தி துறையில் சுமார் 70 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்ய இருப்பதாக கூறியுள்ளார் என்பதும் இங்கு நினைவு கூறத்தக்கது. ஆக இந்தியாவின் டாப் இரு பணக்காரர்கள் ஒரே துறையில் களமிறங்க உள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?

உலகில் மிகக் குறைவாகப் பார்வையிடப்பட்ட நாடுகள் இவைதான்!

அமெரிக்காவில் இன்றும் கழுதைகள் மூலம் அஞ்சல் அனுப்பப்படுகிறதா! ஏன் இந்த நடைமுறை?

மெசேஜிங் செயலி விற்று கோடீஸ்வரரான இளைஞர் - எப்படி தெரியுமா?