Mukesh Ambani's Younger Son Anant Ambani Gets Engaged To Radhika Merchant Twitter
இந்தியா

Ambani : நீண்ட நாள் காதலி ராதிகா மெர்ச்சன்டை மணக்கிறார் ஆனந்த் அம்பானி

Priyadharshini R

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு அவரின் நீண்ட நாள் காதலியான ராதிகா மெர்ச்சன்ட்டுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது

ராஜஸ்தான் மாநிலம் நாத்துவாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜியின் தர்பாரில் இன்று ராதிகா மெர்ச்சண்டுடன் ஆனந்த் அம்பானி நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

ராதிகா மெர்ச்சன்ட்டின் நண்பரான ஓர்ஹான் அவதாரமணி, ஆனந்த் மற்றும் ராதிகாவின் புகைப்படத்தைப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருந்தார். இருவரின் நிச்சயதார்த்த செய்தியை உறுதிப்படுத்த அவர் ஒரு மோதிர ஈமோஜியையும் வைத்தார்.

24 வயதான ராதிகா மெர்ச்சன்ட், ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.

மும்பையில் பள்ளிப்படிப்பை முடித்த ராதிகா, நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரம் படித்தார்.

பட்டம் பெற்ற பிறகு, ராதிகா இந்தியா திரும்பினார். ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் விற்பனை நிபுணராக பணியாற்றத் தொடங்கினார். ராதிகா ஒரு பாரம்பரிய நடனக் கலைஞரும் கூட.

குரு பாவனா தக்கரின் வழிகாட்டுதலின் கீழ் ஏறக்குறைய 8 ஆண்டுகள் பரதநாட்டியம் கற்றுக்கொண்டார்.

ராதிகா மற்றும் ஆனந்த் சிறுவயது நண்பர்கள் மற்றும் 2019 இல், ஆனந்த் மற்றும் ராதிகா நிச்சயதார்த்தம் பற்றி பல செய்திகள் வந்தன.

அப்போது அம்பானி குடும்பத்தினர் யாரும் இந்த செய்தியை உறுதிப்படுத்தவில்லை. ஆனால் தற்போது அவர்கள் இருவரும் நிச்சயதார்த்தம் கொண்டதாக தகவல்கள் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

அவர்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி புது ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?