மேற்கு மும்பை நகரத்தில் உள்ள வடிகாலுக்குள் எலிகளின் பிடியிலிருந்து ரூ. 5,00,000 மதிப்புள்ள 500 கிராம் தங்கத்தை போலீசார் மீட்டிருக்கும் விநோதமான சம்பவம் நடந்திருக்கிறது.
வீட்டு வேலை செய்யும் 45 வயதுடைய பெண் ஒருவர், தான் வாங்கிய கடனை அடைப்பதற்காகத் தங்கத்தை அடமானம் வைப்பதற்காக வங்கிக்குச் செல்லும் போது அதிர்ச்சி காத்திருந்திருந்தது. முன்னதாக, அந்த நகைப்பையில் தான் கொஞ்சம் உணவை வைத்து, அதே பகுதியில் குப்பை சேகரித்துக் கொண்டிருந்த குழந்தைகளுக்குக் கொடுத்தது நினைவுக்கு வந்திருக்கிறது. உடனே அந்த குழந்தைகளைத் தேடிப் பிடிக்க முயற்சி செய்திருக்கிறார், ஆனால் முடியால் போயிருக்கிறது. பிறகு, இந்த தகவலை அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகாராக அளித்திருக்கிறார்.
போலீஸ் மற்றும் உள்ளூர் வாசிகளின் உதவியுடன் அந்தப் பெண் தனது பையைக் கொடுத்த குழந்தைகளைக் கண்டுபிடித்தார். உணவு மிகவும் காய்ந்திருப்பதைக் கண்டு பையைக் குப்பைக் கிடங்கில் வீசி எறிந்ததாகக் குழந்தைகள் போலீசாரிடம் தெரிவித்தனர். குழந்தைகள் பையைத் தூக்கியெறிந்த இடத்தில், போலீசாரால் நகைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னர் போலீசார் அந்த பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளைச் சேகரித்தனர். அதில் ஒரு சில எலிகள் அந்த பையை குப்பைக் கிடங்கிலிருந்து ஒரு சாக்கடைக்கு எடுத்துச் செல்வதைக் காட்டியிருக்கிறது. இந்த தகவலை ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் சப்-இன்ஸ்பெக்டர் சி கார்கே என்பவர் தெரிவித்திருக்கிறார்.
அந்த வீடியோவின் மூலம் எலிகள் பையை இழுத்துச் சென்ற பாதையை பின்தொடர்ந்திருக்கிறார்கள். அப்போது, சாக்கடை கால்வாய் மீது இருந்த கிரில்லை திறந்து பார்த்த போலீசார், பை, நகைகள் அனைத்தும் கால்வாய்க்குள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். பிறகு அவற்றைச் சுந்தரி ப்லனிபெல்லிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust