Raksha Bandhan Canva
இந்தியா

Tinder : டேடிங் ஆப்பில் தங்கையை தேடிய நபர் - என்ன காரணம்?

Keerthanaa R

பிரபல டேட்டிங் ஆப் ஆன டிண்டரில், தங்களுக்கான காதலர்களை தேடுவது தாண்டி பலரும் பல வேடிக்கையான கோரிக்கைகளை எடுத்து வருவது சகஜம் ஆகி விட்டது. அந்த வகையில் இங்கு ஒரு நபர், தங்கையை டிண்டர் ஆப்பில் தேடியுள்ளார்.

உடன்பிறந்தவர்கள் மேல் நமக்கு அதித பாசம் இருந்தாலும், அண்ணன் -தங்கை, அக்கா -தம்பி உறவு இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல் ஆனது தான். பாசமலர், கிழக்கு சீமையிலே படங்களில் வருவது போல் நம் வீடுகளிலும் இந்த உறவுகளுக்குள் இருக்கும் அன்னியோனியம் மனதை நெகிழச் செய்யும். அதிலும் முக்கியமாக அண்ணன் - தங்கை உறவு இன்னும் ஸ்பெஷல்.

உடன் பிறந்த அண்ணனோ, தங்கையோ இல்லாதவர்கள் தங்களோடு நெருங்கி பழகுபவர்களிடம், அல்லது உறவினர்களிடம் அந்த உறவை பெறுவது வழக்கம். ஆனால் இங்கு ஒருவர் மாறாக சற்றே வித்தியாசமாக தனக்கான தங்கையை தேடியுள்ளார்.

டேடிங் செயலியான டிண்டர் நம் மத்தியில் பிரபலம். இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் இந்த செயலி மூலம், நமக்கான ஆண் அல்லது பெண் நண்பர்களை தேடிக்கொள்ளலாம்.

இந்த செயலியை தங்களது துணைகளை தேடுவதை தாண்டி, பல வித்தியாசமான கோரிக்கைகளுடன் சிலர் பயன்படுத்துகிறார்கள். அந்த வகையில் இங்கு ஒரு நபர் தங்கையைத் தேடுவதாக தனது பயோவில் குறிப்பிட்டிருந்தார்.

"ரக்ஷாபந்தன அன்று என்னுடன் நேரம் செலவழிக்க நான் ஒரு தங்கையை தேடுகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தது அவரது பயோவில்!

மேலும் அவர் தான் தன் வாழ்நாள் முழுவதுமே தனக்கு ஒரு தங்கை இல்லையே என்று ஏங்கியதாகவும் தெரிவித்தார். முக்கியமாக, ரக்ஷாபந்தன் நேரத்தில் தான் இந்த ஏக்கம் அதிகமாக இருந்ததாம். காரணம் தனக்கு ராக்கி கட்டிவிட யாரும் இல்லை, இதனால் தன்னாலும் யாருக்கும் எந்த பரிசும் வழங்க முடிந்ததில்லை என்பது அவரது வருத்தம்.

ரக்ஷாபந்தன் சகோதர சகோதரி உறவை கொண்டாடும் ஒரு வட இந்தியக் கலாச்சாரம். ஆனால், காலப்போக்கில் அனைவருமே விரும்பி கொண்டாடத் துவங்கிவிட்டனர். உடன் பிறந்த சகோதரிகள் தங்களது அண்ணன் அல்லது தம்பிகளுக்கு தங்களது அன்பை வெளிப்படுத்தும் விதமாக ராக்கி கயிற்றைக் கட்டி அவர்களிடம் ஆசி பெறுவார்கள். பதிலுக்கு சகோதரர்கள் சகோதரிகளுக்குப் பரிசுகள் வழங்கவேண்டும்.

கடந்த இரண்டு வருடங்களாக, ரக்ஷா பந்தன் துவங்குவதற்கு இரண்டு வாரங்கள் முன்பு அவர் இப்படி தன் பயோவை மாற்றி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

கடந்த இரண்டு வருடங்களாகத் தங்கையை தேடிவரும் அந்த நபருக்கு இம்முறை ஒன்றல்ல, இரு சகோதரிகள் கிடைத்துள்ளனர். இதனால், மிக்க மகிழ்ச்சியில் தான் இருப்பதாகவும், மூவரும் இந்த முறை ரக்ஷாபந்தன் அன்று சந்தித்து நேரம் செலவழிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தன்னை சந்திக்க வரப்போகும் இரு சகோதரிகளுக்கும் அவர் பரிசுகள் கொடுத்து, அவர்களிடமிருந்து ராக்கி கட்டிக்கொள்ளப்போவதாகவும் அவர் தன் டிண்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இதற்கு முன்னர் ஒருவர் இதே போல டேடிங் ஆப் இல் வாடகைக்கு வீடு தேடிய சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?