Hinduism

 

NewsSense 

இந்தியா

உலகின் மிகப் பெரிய இந்துக் கோவிலைக் கட்ட நிலம் வழங்கிய முஸ்லிம் குடும்பத்தினர்!

மினு ப்ரீத்தி

நாட்டின் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் பீகாரை சேர்ந்த முஸ்லீம் குடும்பம்... இந்தக் குடும்பம் உலகின் மிகப்பெரிய இந்து கோவில் கட்டுவதற்காக ரூ.2.5 கோடி மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாக அளித்துள்ளது.

விராட் ராமாயண் கோவில், கிழக்குச் சம்பாரண் மாவட்டத்தில் உள்ள கைத்வாலியா பகுதியில் உள்ளது. கோவில் கட்டும் திட்டத்தை மேற்கொண்டுள்ள பாட்னாவை தளமாகக் கொண்ட ‘மகாவீர் மந்திர் அறக்கட்டளையின்’ தலைவர், ஆச்சார்யா கிஷோர் குணால் அவர்கள், நிலத்தை நன்கொடையாக வழங்கியதைப் பற்றிச் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். “ இங்குக் கோவில் கட்டுவதற்காக, நிலத்தை நன்கொடையாக வழங்கியவர், இஷ்தியாக் அகமது கான். இவர் குவாஹாட்டியில் உள்ள கிழக்குச் சம்பாரனைச் சேர்ந்த தொழிலதிபராவார்.”

Hindu Muslim Unity

முன்னாள் இந்திய காவல்துறை அதிகாரி குணால் செய்தியாளர்களிடம் கூறியது, “சமீபத்தில் கேஷாரியா துணைப்பிரிவு (கிழக்கு சாம்பரன்) பதிவாளர் அலுவலகத்தில் கோவில் கட்டுவதற்காக, தனது குடும்பத்துக்குச் சொந்தமான நிலத்தை நன்கொடையாக வழங்கியதுடன், அது தொடர்பான அனைத்து சம்பிரதாயங்களையும் இஷ்தியாக் அகமது கான் முடித்துள்ளார்.” எனச் செய்தியாளர்களிடம் கூறினார் குணால்.

மேலும், “திரு கான் மற்றும் அவரது குடும்பத்தினரின் இந்த நன்கொடை வழங்கியதன் மூலம் சமூக நல்லிணக்கம் மற்றும் இரு சமூகங்களுக்கு இடையிலான சகோதரத்துவத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி இருக்கிறார்கள்” என்றும் ஆச்சார்யா கூறினார். முஸ்லிம்களின் உதவி இல்லாவிட்டால் இந்தக் கனவுத் திட்டத்தை நனவாக்குவது மிகக் கடினமாக இருந்திருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

மகாவீர் மந்திர் அறக்கட்டளை, இதுவரை இந்தக் கோவிலை கட்டுவதற்காக 125 ஏக்கர் நிலத்தை பெற்றுள்ளது. மேலும், இந்த அறக்கட்டளை விரைவில் அப்பகுதியில் இன்னும் 25 ஏக்கர் நிலத்தையும் பெறவுள்ளதாக சொல்லப்படுகிறது.

215 அடி உயரமுள்ள கம்போடியாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அங்கோர் வாட் வளாகத்தை விட விராட் ராமாயண மந்திர் உயரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்குச் சம்பாரனில் உள்ள வளாகத்தில் உயரமான கோபுரங்கள் கொண்ட 18 கோவில்கள் உள்ளன. அவற்றில் ஒரு சிவன் கோவிலில் உலகின் மிகப்பெரிய சிவலிங்க சிலையும் உள்ளது.

பீகாரில் உள்ள இந்த இந்து கோவிலை கட்டுவதற்கான மொத்த கட்டுமான செலவு சுமார் ₹ 500 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், டில்லியில் புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள நிபுணர்களின் ஆலோசனையை, இந்த அறக்கட்டளை விரைவில் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?