நாகாலாந்து : 60 ஆண்டுகள் கழித்து முதல் மருத்துவக்கல்லூரி - என்னென்ன சிறப்புகள்?
நாகாலாந்து : 60 ஆண்டுகள் கழித்து முதல் மருத்துவக்கல்லூரி - என்னென்ன சிறப்புகள்? Twitter
இந்தியா

நாகாலாந்து: 60 ஆண்டுகள் கழித்து முதல் மருத்துவக்கல்லூரி - என்னென்ன சிறப்புகள்?

Antony Ajay R

மாநில அந்தஸ்து கிடைத்து 60 ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய முதல் மருத்துவக் கல்லூரியை நிறுவியிருக்கிறது நாகாலாந்து.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாகாலாந்தின் முதல் மருத்துவமனையை திறந்து வைத்தார்.

கொஹிமாவில் அமைந்திருக்கும் இந்த கல்லூரி NIMSR - நாகாலந்து இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் ரிசர்ச் என அழைக்கப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் தேசிய மருத்துவ ஆணையம், 2023-24 கல்வியாண்டில் NIMSR -க்கு 100 மருத்துவ கல்வி இடங்களுக்கான கடிதத்தை வழங்கியது.

இந்த மருத்துவ கல்லூரிக்கான அடிக்கல் 2014ம் ஆண்டு முதல்வர் நைபியு ரியோவால் நடப்பட்டது. 2023ம் ஆண்டில் தான் முதன்முதலாக இங்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

நாகாலாந்து மாணவர்கள் 85 பேரும் பிறமாநிலத்தவர்கள் 6 பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இது ஒரு மருத்துவக்கல்லூரி மட்டுமல்லாமல் மருத்துவ ஆராய்ச்சி மையமாகவும் இருக்கிறது.

இதனால் மத்திய அரசும் இதற்கு பகுதியளவு நிதியளித்து வருகிறது. நாடுமுழுவதும் இது போல 58 கல்லூரிகளுக்கு மத்திய அரசு நிதியளிக்கிறது.

இந்த கல்லூரி அமைக்கப்படுவதை வரலாற்று நிகழ்வாக கருதுகிறார் முதல்வர் நைபியு ரியோ. இது நாகாலாந்து மக்களின் நீண்டகால கனவு என்றும் தெரிவித்துள்ளார்.

நாகாலாந்தில் இருந்து ஆண்டுதோறும் 1000க்கும் மேற்பட்ட நோயாளிகள் புற்றுநோய் போன்ற தீவிர நோய்களுக்கு சிகிச்சை பெற வெளி மாநிலங்களுக்கு செல்கின்றனர்.

இந்த மருத்துவக்கல்லூரி வந்துவிட்டதால் இனி மக்களுக்கு சிகிச்சைக்கான செல்வு வெகுவாக குறையும் என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் கல்வி வழங்குவதுடன் நாகா மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகளையும் கண்டறிய உதவும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?