நடு இரவில் நிர்வாணமாக காலிங் பெல் அடிக்கும் பெண் - மர்மத்தை விலக்கிய காவலர்கள் Twitter
இந்தியா

நடு இரவில் நிர்வாணமாக காலிங் பெல் அடிக்கும் பெண் - மர்மத்தை விலக்கிய காவலர்கள்

Antony Ajay R

உங்கள் வீட்டில் நடு இரவில் காலிங் பெல் அடித்தால் சாதாரணமாக திறப்பீர்களா என்ன? தைரியத்தை வரவழைத்துக்கொண்டு திறக்க சென்று, ஒரு நிர்வாணமான பெண் இருப்பதைப் பார்த்தால் நிச்சயம் கதவைத் திறக்க மாட்டீர்கள் தானே...

ஆனால் இந்த சம்பவம் உண்மையாகவே உத்தரபிரதேசம் ராம்பூர் என்ற இடத்தில் நடைபெற்றுள்ளது.

யார் இந்த பெண்? பேயா? ஏதாவது கொள்ளைக் கூட்டமா? என அந்த பகுதி மக்கள் பலவற்றை சிந்தித்து பயந்துகொண்டிருந்தனர்.

இறுதியாக காவல்துறையினர் தலையிட்டு விஷயத்தைக் கண்டறிந்தனர்.

நடு இரவில் பல வீடுகளின் காலிங் பெல்லை அந்த பெண் அழுத்துவது சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. சிலர் திறந்து பார்க்கும் போது அந்த பெண் மாயமாக மறைந்துவிடுகிறார்.

இந்த சம்பவம் இணையத்தில் வைரலானது. இது குறித்து அங்கு வசித்து வந்த ஒருவர் காவல்துறைக்கு புகார் கொடுத்துள்ளார்.

காவல்துறையினர் உண்மையைக் கண்டறிந்தனர். அந்த பெண் மனநலம் சரியில்லாதவர் என்றும், அவரது குடும்பத்தினருடன் பேசி வருவதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

மேலும் அந்த பெண் கடந்த ஐந்து வருடமாக மனநல சிகிச்சை எடுத்து வருவதாகவும் காவலர்கள் கூறியுள்ளனர்.

அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து எந்த தகவலையும் வெளியிடாத காவல்துறையினர் சமூக வலைத்தளத்தில் இது குறித்து தவறான கருத்துக்களை தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

அந்த பெண்ணை இனி எங்காவது பார்த்தால் அவருக்கு ஆடை அணிவித்து விட்டு அருகில் உள்ள காவல்நிலையத்தில் தெரிவியுங்கள் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?