Kerala: ’ஏழைகளின் ஊட்டி’ Nelliyampathy மலைகள் குறித்து தெரியுமா?  Twitter
இந்தியா

Kerala: ’ஏழைகளின் ஊட்டி’ Nelliyampathy மலைகள் குறித்து தெரியுமா?

இடுக்கி, கோழிக்கோடு, திருவனந்தபுரம் என கேரளாவின் பல இடங்களை குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். கேரளாவின் மற்றொரு அழகிய மலைப்பகுதிக் குறித்த பதிவு தான் இது.

Keerthanaa R

இந்தியாவின் பிரபலமான, மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்று கேரளா. கண்கவர் இயற்கை காட்சிகளும், பாரம்பரியங்களை பறைச்சாற்றும் கோவில்களும், சுவை மிக்க உணவுகளும், மழையும் மலையும் என கேரளாவின் அழகை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

இதன் காரணமாகவே ஆண்டுதோறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகமாக ஈர்கிறது இந்த மலையாள பிரதேசம்.

இடுக்கி, கோழிக்கோடு, திருவனந்தபுரம் என கேரளாவின் பல இடங்களை குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். கேரளாவின் மற்றொரு அழகிய மலைப்பகுதிக் குறித்த பதிவு தான் இது.

ஏழைகளின் ஊட்டி

பாலக்காடு பகுதியில் அமைந்திருக்கிறது நெல்லியம்பதி மலைகள். பச்சை பசேல் என்ற நிலப்பரப்புகள், காபி, ஸ்பைசஸ், ஆரஞ்சு மற்றும் தேயிலை தோட்டங்கள், அருவிகளை கொண்டது இந்த நெல்லியம்பதி மலைகள்.

கோடைக்கால வெய்யிலினை சமாளிக்க சில்லென்ற நெல்லியம்பதி சிறந்த தேர்வாக இருக்கும். இங்கு நிலவும் குளிரான வெப்பநிலைக்காகவே இதனை, ஏழைகளின் ஊட்டி(Poor Man's Ooty) என்று அழைக்கின்றனர்.

எப்படி செல்வது?

விமானம் மூலமாகவோ, ரயில் மூலமாகவும், சாலை வழியாகவும் இங்கு சென்றடைய முடியும்.

கோவையிலிருந்து விமானம் மூலமாக இரண்டரை மணி நேரம் பயணித்து நெல்லியம்பதிக்கு செல்லலாம்.

பாலக்காடு ரயில் நிலையம் தான் நெல்லியம்பதி செல்ல மிக அருகாமையான ரயில் நிலையம். பாலக்காடிலிருந்து சுமார் 52 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது நெல்லியம்பதி மலைப்பகுதி.

கர்நாடகாவின் நென்மாறா போன்ற இடங்களிலிருந்து சாலை வழியாக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது

நெல்லியம்பதியில் நிச்சயம் பார்க்கவேண்டிய இடங்கள்

பரம்பிக்குளம் புலிகள் காப்பகம்:

இந்தியாவின் தேசிய விலங்கான புலிகளை பாதுகாக்கும் இந்த சரணாலயம் மிக பிரபலமான சுற்றுல தலமும் கூட இங்கு ஹைக்கிங் செய்யலாம், சஃபாரிகள் சென்று வன விலங்குகளை காணலாம்

மயிலாடும்புறா:

பெயருக்கு ஏற்றார்போல இங்கு ஏராளமான மயில்களை காணலாம். மயிலாடும்புறா என்பதன் தமிழாக்கம், “மயில்கள் நடமாடும் பாறை” என்பதாகும்

இங்கு அழிவின் விளிம்பில் இருக்கும் மயில்களை பாதுகாத்து, பராமரித்து வருகின்றனர். அதிகாலை நேரத்தில் சென்றால் மயில்கள் தோகை விரித்து நடனமாடுவதை கண்டு ரசிக்கலாம்

பொத்துண்டி அணை

பொத்துண்டி அணையானது வெல்லம் மற்றும் சுண்ணாம்பு ஆகியவற்றின் தனித்துவமான கலவையை மையப் பொருளாகக் கொண்டு கட்டப்பட்டது. விவசாயத்தை ஆதாரமாக நம்பியிருக்கும் இப்பகுதிக்கு, பொத்துண்டி அணை மிக முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.

இந்த அணைக்கு அருகில் நெல்லியம்பதி பள்ளத்தாக்கும் உள்ளது

இவற்றைத் தவிர சைலண்ட் வேலி, நென்முரா, மலம்புழா, மீன்வள்ளம் அருவி உள்ளிட்ட இடங்கள் இங்கு ஃபேமஸ்

கூத்தம்புள்ளி கிராமம்

நெல்லியம்பதி மலைகளில் இருந்து சுமார் 61 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது கூத்தம்புள்ளி கிராமம்.

கூத்தம்புள்ளி கைத்தறி புடவைகள் மிகவும் பிரபலம். குறிப்பாக மைசூரு மன்னர்களிடத்தில்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?