Narendra Modi: இறுதி கட்டத்தை எட்டும் புதிய நாடாளுமன்றம்; திறந்து வைப்பது யார் தெரியுமா? ட்விட்டர்
இந்தியா

Narendra Modi: இறுதி கட்டத்தை எட்டும் புதிய நாடாளுமன்றம்; திறந்து வைப்பது யார் தெரியுமா?

சுமார் 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படும் இந்த புதிய நாடாளுமன்ரத்தில் மொத்தம் 4 மாடிகள் இருக்கும். ரூ.970 கோடி செலவில் கட்டப்படுகிறது இக்கட்டிடம்

Keerthanaa R

வருகிற மே 28 ஆம் தேதி புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி அரசு ஆட்சியமைத்து வரும் மே 26 உடன் 9 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், அதன் ஒரு பகுதியாக இந்த திறப்பு விழா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் மத்திய விசுடா மறுவளர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லியில் கட்டப்பட்டு வருகிறது புதிய நாடாளுமன்ற கட்டிடம். இது தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடத்திற்கு எதிர் புறத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.

கட்டுமானம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில், இதன் திறப்பு விழா இம்மாத இறுதியில் நடைபெறலாம் என கூறப்படுகிறது.

மத்திய பொது பணித்துறையால் செயலபடுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தில், டெல்லி ராஷ்டிரபதி பவனில் இருந்து இந்தியா கேட் வரையிலான 3 கிமீ சாலையை சீரமைத்தல், பொது மத்திய செயலகம், பிரதமரின் புதிய அலுவலகம் மற்றும் குடியிருப்பு, புதிய துணை ஜனாதிபதி என்கிளேவ் ஆகியவையும் அடங்கும்.

கடந்த 2020ஆம் ஆண்டு பிரதமர் மோடி இந்த கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டினார். சுமார் 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படும் இந்த புதிய நாடாளுமன்ரத்தில் மொத்தம் 4 மாடிகள் இருக்கும். ரூ.970 கோடி செலவில் கட்டப்படுகிறது இக்கட்டிடம்

புதிய நாடாளுமன்ரத்தில் 1224 எம் பிக்கள் அமரும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மக்களவை சுமார் 800 பேருக்கும் மேல் அமரவும், மாநிலங்களவையில் 380க்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்துக்குள் நுழைய மூன்று நுழைவாயில்கள் வைக்கப்பட்டு, அதற்கு பெயர்களும் சூட்டப்பட்டுள்ளன, கியான் துவார், கர்மா துவார் மற்றும் சக்தி துவார்.

இந்திய கணிதவியலாளர் சாணக்கியரின் படம் ஒன்று இந்த கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், கோணார்க் சூரிய கோவிலில் இருக்கும் சக்கரத்தின் ஒரு மாதிரி வடிவமைப்பும் இங்கு வைக்கப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?