பெண் சக்தி

 

Facebook

இந்தியா

News Wrap: திடீர் டிரைவரான பெண், கேப்டன்சியை பறிகொடுத்த விராட் - முக்கிய செய்திகள்

Antony Ajay R

ஓடும் பேருந்தில் டிரைவருக்கு வலிப்பு - 10 கிலோமீட்டர் பேருந்து ஓட்டிய பெண்

புனே அருகே ஷிரூரில் உள்ள வேளாண் சுற்றுலா மையத்துக்குப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மினி பேருந்தில் சுற்றுலா சென்றனர். மாலையில் அவர்கள் திரும்பி வரும் போது, பேருந்து ஓட்டுநருக்கு வலிப்பு வந்ததால் பாதியில் பேருந்தை நிறுத்தினார். இதனால் உள்ளிருந்த பெண்கள் குழந்தைகள் அலறத்தொடங்க்கினர்.

அப்போது அந்த பேருந்தில் பயணம் செய்த யோகிதா சாதவ் என்ற 42 வயது பெண் தான் பேருந்தை ஓட்டுவதாக கூறி டிரைவரை ஓரமாக அமரவைத்துவிட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்குப் பேருந்தை ஓட்டி சென்றார். கார் மட்டுமே ஓட்ட தெரிந்த யோகிதா சாமர்த்தியமாகவும் துணிச்சலாகவும் செயல்பட்டு அனைவரையும் வீடு சேர்த்துள்ளார்.

கேரள உயர் நீதிமன்றம்

மால்களில் வாகனம் நிறுத்த கட்டணம் கிடையாது - கேரள உயர்நீதி மன்றம் தீர்ப்பு


வணிக வளாகங்களில் பொருட்கள் வாங்க வருபவர்களுக்கு அதன் அடிப்பகுதியில் வாகன நிருத்துகிடம் இருக்கும். இங்கு டூவீலருக்கு ஒரு கட்டணமும் கார்களுக்கு ஒரு கட்டணமும் வசூலிக்கப்படும். மால்கள் வசூலிக்கும் கட்டண தொகை அதிகமாக இருப்பதால் பலர் அந்த சுற்று வட்டார பகுதியில் வாகனம் நிறுத்துகின்றனர். மால்களில் வாகனம் நிருத்த கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இனி மால்கள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என நீதி மன்றம் தீர்ப்பளித்தது. மேலும் போதிய பார்கிங் வசதி இல்லாவிடில் வணிக வளாகத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது எனவும் கூறியுள்ளது.

விராட் கோலி

கேப்டன் பதவியிலிருந்து விலகினார் விராட் கோலி


தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் விராட் கோலி.

ஏற்கெனவே டி20 உலக கோப்பை முடிந்ததும் கேப்டன்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் கோலி. பின்னர் பிசிசிஐ அவரை ஒரு நாள் போட்டி கேப்டன்சியிலிருந்து நீக்கியது. இப்போது டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன்சியிலிருந்து விலகியதன் மூலம் அனைத்து வித கேப்டன் பதவியிலிருந்தும் வெளியேறியுள்ளார்.

அவரது அறிவிப்பில், “என் மீது நம்பிக்கை வைத்த தோனிக்கு நன்றி எனத் தெரிவித்தார் விராட்”

விஜய நல்லதம்பி - ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த விஜயநல்லதம்பி கைது!

ராஜேந்திர பாலாஜி மீது 3கோடி ரூபாய் மோசடி புகார் கொடுத்த அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் விஜய நல்லதம்பி கோவில்பட்டி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த ஒரு மாத காலமாகத் தலைமறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன்னர் தான் ராஜேந்திர பாலாஜிக்கு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. விஜய நல்லதம்பியை விருதுநகர் குற்ற பிரிவு காவல்நிலையத்திற்கு அழைத்துவந்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தவுள்ளதாகத் தகவல் வந்துள்ளது.

குமரி ஆனந்தன்

காமராசர், திருவள்ளுவர் விருதுகள்

தமிழக அரசின் 2021-ம் ஆண்டுக்கான காமராசர் விருது காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் அய்யன் திருவள்ளுவர் விருது மீனாட்சி சுந்தரத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?