"என்னிடம் இந்தியாவிலேயே கிடைக்காத மாம்பழங்கள் இருக்கின்றன; கிலோ 2.7 லட்சம்" - யார் இவர்? Representation
இந்தியா

"என்னிடம் இந்தியாவிலேயே கிடைக்காத மாம்பழங்கள் இருக்கின்றன; கிலோ 2.7 லட்சம்" - யார் இவர்?

தனது மரங்களில் இருந்து பழங்கள் திருடு போகாமல் காக்க 11 நாய்களைப் பயன்படுத்துகிறார். அந்த தோட்டத்தில் 3 காவலாளிகளும் சிசிடிவி கேமராக்களும் கூட இருக்கின்றன.

Antony Ajay R

மத்தியபிரதேசம் மாநிலம் ஜாபல்பூரில் உள்ள இந்த மாம்பழத் தோட்டத்தின் உரிமையாளர் சங்கல்ப் சிங் தனது தோட்டத்தில் இருக்கும் பழங்கள் சாதாராணமானவை இல்லை என்கிறார்.

இந்த தோட்டத்தில் 24 வகை மாம்பழங்கள் இருக்கின்றனவாம். சில வகைகள் இந்தியாவிலேயே வேறெங்கும் கிடைக்காது எனவும் கூறியுள்ளார். இவற்றின் மதிப்பு பல லட்சங்களை எட்டும் என்கிறார்.

தனது மரங்களில் இருந்து பழங்கள் திருடு போகாமல் காக்க நாய்களைப் பயன்படுத்துகிறார். அந்த தோட்டத்தில் காவலாளிகளும் சிசிடிவி கேமராக்களும் கூட இருக்கின்றன.

"இந்த வருடம் காவலுக்கு 2-3 ஆட்களை இரவில் நிறுத்திவைக்கவுள்ளோம். நாய்களும் நிறைய இருக்கும். கடந்த ஆண்டு 8 நாய்கள் இருந்தன. இந்த ஆண்டு 11 நாய்கள் இருக்கும்.

வழக்கமாக திருடர்கள் வேலியை உடைத்துவிட்டு பழங்களைத் திருட உள்ளே வருவார்கள். வேலிக்கு பின்னால் நாய்கள் இருப்பது பழங்கள் திருடப்படாமல் பாதுகாக்கும். இந்த ஆண்டு சிசிடிவி கேமராக்களையும் பழுதுபார்த்து வைத்திருக்கிறோம்." எனத் தனது பாதுகாப்புக் குறித்துப் பேசியுள்ளார்.

Dog

தன்னிடம் இருக்கும் மாம்பழ வகைகள் குறித்து, "மியாசகி மாம்பழங்கள் ஜப்பானில் கிலோ 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்திய சந்தையில் அந்த அளவு விலையைப் பெறுவது சாத்தியமில்லைதான், ஆனால் வெளிநாட்டில் 2.7 லட்சத்துக்கு விற்கப்படும் மாம்பழம் நம் நாட்டின் சுற்றுசூழலில் சிறப்பாக வளர்கிறது."

ஜப்பானின் மியாசகி மட்டுமில்லாமல் பைகன் மாம்பழங்கள், சீனாவின் ஐவோரி பற்கள், நேபாள வகையான கேசர் பாதாம் மற்றும் ஃப்ளோரிடாவின் கறுப்பு மாம்பழங்களும் இவரது பழத்தோட்டத்தில் விளைவிக்கப்படுகின்றன.

மேலும், சங்கல்ப் சிங் ஹைப்ரீட் மாம்பழங்களை உருவாக்குவதிலும் பணத்தை முதலீடு செய்துள்ளார். கடந்த மாதம் எதிர்பாராமல் பெய்த கோடை மழையால் பழத்தோட்டம் கொஞ்சம் பின்னடைவை சந்தித்துள்ளது. என்றாலும் பல மரங்களில் இப்போதும் பறிப்பதற்கு தயாராக பழுத்து தொங்கிக்கொண்டிருக்கிறது மாம்பழங்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?