ஒரிசா ரயில் விபத்து: உயரும் பலி எண்ணிக்கை - என்ன நடந்தது? ட்விட்டர்
இந்தியா

ஒடிசா ரயில் விபத்து: உயரும் பலி எண்ணிக்கை - என்ன நடந்தது?

தற்போது வரை சுமார் 237 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 900த்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களுக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படைகள் உதவி எண்களையும் அறிவித்துள்ளனர்

Keerthanaa R

ஒடிசா மாநிலத்தில் இரண்டு பயணிகள் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் மற்றும் ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று ஒடிசாவின் பாலாசூர் மாவட்டம் பஹனகா ரயில் நிலையத்தில் வந்துகொண்டிருந்த கோரமண்டல், பெங்களூரு - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்கள் கூட்ஸ் ரயிலுடன் மோதியதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 900த்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

ஒரு ரயில் தடம்புரண்ட மற்றொரு பெட்டியின் மீது மோதியதில், விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்ன நடந்தது?

நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. தகவல்களின் அடிப்படையில், ஒரு சரக்கு ரயிலும், கோரமண்டல் எக்ஸ்பிரஸ்ஸும் ஒரே பாதையில் வந்ததால் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கோரமண்டல், மேற்கு வங்கத்திலுருந்து சென்னை வரும் ரயில் ஆகும்.

ரயில் விபத்து ஏற்பட்ட நிலையில், யஸ்வந்த்பூரிலிருந்து ஹவுரா செல்லும் மற்றுமொரு ரயில் வந்து மோதி மீண்டும் விபத்து ஏற்பட்டது. இந்த ஹவுரா யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸின் பெட்டிகள் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

அதாவது, சரக்கு ரயிலுடன் மோதியதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் பெட்டிகள் எதிர் தண்டவாளத்தில் விழுந்த நிலையில், அந்த தண்டவாளத்தில் வந்த ஹவுரா எக்ஸ்பிர்ஸ் ரயில் விபத்துக்குள்ளானது.

ஒரே பாதையில் இரண்டு ரயில்கள் எப்படி வந்தது என்பது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பலி எண்ண்ணிக்கை

தற்போது வரை சுமார் 237 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 900த்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களுக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.

மீட்பு பணிகளில் ராணுவம், விமானப்படை மற்றும் என் டி ஆர் எஃப் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்ககூடும் என கூறப்பட்டுள்ளது

தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை அறிவித்த உதவி எண்கள்

ஹத்ராக்: 8455889900

ஜாஜ்பூர் கியோனிஹார் சாலை: 8455889906

கட்டாக்: 8455889917

புவனேஸ்வர்: 8455889922 குர்தா சாலை: 6370108046 பிரம்மாபூர்: 89173887241

பாலுகான்: 9937732169

பலாசா: 8978881006

ஹவுரா ஹெல்ப்லைன் எண்: 033-26382217

ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்நவ் சமபவ இடத்துக்கு வந்து சேர்ந்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10லட்சம் இழப்பீடாகவும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும், பலத்த காயமல்லாதவர்களுக்கு 50,000 ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்திருக்கிறார்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?