ஒடிசா மாநிலம் பாலசோரில், நேற்று கோர ரயில் விபத்து ஏற்பட்டது. இதில் தற்போதைய நிலவரப்படி 280 பேர் உயிரிழந்துள்ளனர். 900த்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மீட்பு பணிகள், நிவாரண நிதிகள் உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்கு வங்கத்திலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், சரக்கு ரயில் மற்றும் பெங்களூரு - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மோதியதில் விபத்து ஏற்பட்டது.
மத்திய அரசு சார்பில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களுக்கு இழப்பீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன
இந்த ரயிலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் பயணித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடு, காயமடைந்தவர்களுக்கு 1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் மற்றும் சிவசங்கர் ஆகியோர் ஒடிசா பயணிக்கின்றனர்.
இந்த கோர ரயில் விபத்து தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதே வெள்ளிக்கிழமையன்று, இதே கோரமண்டல் விரைவு ரயில் 14 ஆண்டுகளுக்கு முன் விபத்துக்குள்ளாகியுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், 13 ஆம் தேதி ஜாஜ்பூர் மாவட்டத்தில் கோரமண்டல் ரயில் விபத்துக்குள்ளானது. இந்த ஜாஜ்பூர் மாவட்டம் பாலசோருக்கு அருகில் இருக்கக்கூடிய பகுதியாகும்.
13 பெட்டிகள் தடம் புரண்ட அந்த விபத்தில் 16 பேர் பலியாகினர் மற்றும் சுமார் 160 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தும் மாலை 7.30 முதல் 7.40க்குள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தின் காரணமாக ஒடிசா மாநில மக்கள் இந்த தினத்தை ஒரு கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர். நேற்றின் விபத்தும் கிட்டத்தட்ட அதே பகுதியில், அதே வெள்ளிக்கிழமையில் நடந்ததால், அந்த கருப்பு தினத்தை நினைவுக்கூர்ந்து வருகின்றனர் மக்கள்.
ஒடிசா ரயில் விபத்து சமீபத்தில் நடந்த மிக மோசமான விபத்து என கூறிவருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust