Ola Twitter
இந்தியா

Ola: பாதியில் நிறுத்தப்பட்ட பயணம்; 95,000 ரூபாய் இழப்பீடு வழங்கிய நிறுவனம் - என்ன நடந்தது?

ஜாபெஸ் சாமுவேல் என்ற அந்த நபர் பயணத்தின் பாதியிலே இறக்கிவிடப்பட்டது மட்டுமல்லாமல் கூடுதலாக 861 ரூபாய் கட்டணம் செலுத்தவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.

Antony Ajay R

ஹைத்ராபாத்தைச் சேர்ந்த நபருக்கு 95,000 ரூபாய் இழப்பீடு வழங்க ஓலா நிறுனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜாபெஸ் சாமுவேல் என்ற அந்த நபர் பயணத்தின் பாதியிலே இறக்கிவிடப்பட்டது மட்டுமல்லாமல் கூடுதலாக 861 ரூபாய் கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றிருக்கிறது.

சாமுவேல் அவரது மனைவி மற்றும் உதவியாளருடன் கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி 4 மணி நேர பயணத்துக்காக ஓலா கேப் புக் செய்துள்ளார். அப்போது வந்த ஓட்டுநர். ஏ.சி ஆன் செய்ய கூறியபோது மறுத்திருக்கிறார். இவர்களிடம் கறாராக நடந்துகொண்டது மட்டுமல்லாமல் பயணத்தைத் தொடங்கிய 4-5 கிமீ சென்றபோதே இடையில் விட்டுச் சென்றுள்ளார்.

இதனால் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்ல முடியாமல் தங்களது திட்டங்களை மாற்ற வேண்டியிருந்ததாக சாமுவேல் புகாரில் கூறியுள்ளார்.

Consumer Court

அது மட்டும் இல்லாமல் பாதியில் இறக்கிவிடப்பட்ட பயணத்துக்கு 861 ரூபாய் கட்டணம் கொடுக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கிறார்.

இந்த கட்டணம் அதிகப்படியானது என்று நிறுவனத்துக்கு மெயில் செய்துள்ளார் சாமுவேல். அதன் பிறகு வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து அழைத்து கட்டணத்தை செலுத்த கேட்டிருக்கின்றனர்.

அந்த சேவை மைய ஊழியர்கள் மேலதிகாரிகளுக்கு அழைப்பை மாற்ற மறுத்ததுடன் பல முறை கால் செய்து கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தியிருக்கின்றனர்.

இதனால் கடந்த ஜனவரியில் சாமுவேல் தனது கட்டணத்தை செலுத்தியிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து சாமுவேல் ஓலா நிறுவனத்தின் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் புகாரை பதிவு செய்துள்ளார்.

அந்த புகாரில் தனக்கு 4,99,000 இழப்பீடு வேண்டும் என சாமுவேல் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த தொகை மிகையானது எனக் கருதிய நீதிமன்றம், ஓலா நிறுவனத்தை 861 ரூபாய் 21 விழுக்காடு ஆண்டு வட்டியுடன் திரும்பச் செலுத்த அறிவுறுத்தியது.

அதுமட்டுமின்றி மன உளைச்சலுக்கு 88,000 இழப்பீடும் இதர செலவுகளுக்காக 7000 இழப்பீடும் வழங்க உத்தரவிட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?