Oldest Shiva Temple in Gudimallam, Andhra Pradesh Twitter
இந்தியா

இந்தியா : பழமையான சிவன் கோவில் எங்கு இருக்கிறது தெரியுமா? அதன் சிறப்பு என்ன?

சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பழமையான கோயிலாக நம்பப்படும் இந்தக் கோயிலுக்குப் பின்னால் நிறைய வரலாறுகள் உள்ளன.

Priyadharshini R

இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் இந்த குடிமல்லம் கிராமம் உள்ளது .

அந்த கிராமம் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலுக்காக நன்கு அறியப்படுகிறது.

லிங்கம் சிலை ஒன்று குடிமல்லம் கிராமத்தின் பாழடைந்த பரசுராமர் கோயிலிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இங்கு இருக்கும் பழமையான லிங்கம், கோவிலின் கர்ப்பகிரகத்தில் அமைந்துள்ள சிவனின் முழு உருவத்தை பிரதிபலிக்கிறது.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சிவனுடன் தொடர்புடைய இரண்டாவது பழமையான லிங்கம் இதுவாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

லிங்க விக்கிரகத்தின் காலம் கிமு 3ஆம் நூற்றாண்டு என்று கூறப்படுகிறது.

லிங்கத்தின் அமைப்பு

கருங்கல்லால் செய்யப்பட்ட லிங்கம் சிலையின் நடுவில் நின்ற நிலையில் சிவன் உருவம் திறந்த மேனியுடன் வடிக்கப்பட்டுள்ளது.

சிவபெருமான் ஒரு கையில் பரசுவையும், மற்றொரு கையில் வேட்டையாடிய ஆட்டுக்கிடாவையும் கையில் வைத்துக்கொண்டு நின்று கொண்டிருக்கின்றார். கையில் பரசு இருப்பதால் இவருக்கு பரசுராமர் என்ற பெயர் வந்ததாக ஒரு தகவல் உள்ளது.

சிலையில் இருக்கும் சிவனின் ஆடை முறை, ரிக் வேத காலத்துக்கு முற்பட்டது என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இந்த உருவத்தில் வேறு எந்த சிவன் தெய்வமும் இல்லாததால் அதன் தனித்துவம் உள்ளது.

மேலும் இந்த சிவன் சிலை, சிந்து சமவெளி நாகரிகத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது என இக்கோயிலின் முதன்மைச் செயல் அதிகாரி கே ராமச்சந்திர ரெட்டி கூறியிருக்கிறார்.

சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பழமையான கோயிலாக நம்பப்படும் இந்தக் கோயிலுக்குப் பின்னால் நிறைய வரலாறுகள் உள்ளன.

மதுரா அருங்காட்சியகத்தில் உள்ள 1 ஆம் நூற்றாண்டின் சிற்பம் குடிமல்லம் சிவனைப் போன்ற ஒரு உருவத்தையும் கொண்டுள்ளது.

இந்த லிங்கம் முதலில் திறந்த வெளியில் அமைந்திருந்தது. 1954 முதல் இந்திய தொல்லியல் துறையின் (ASI) பாதுகாப்பில் உள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?