Online Shopping: பெண்களை விட அதிக பணம் செலவிடும் ஆண்கள்? - ஆய்வு சொல்வதென்ன? Twitter
இந்தியா

Online Shopping: பெண்களை விட அதிக பணம் செலவிடும் ஆண்கள்? - ஆய்வு சொல்வதென்ன?

ஆன்லைன் ஷாப்பிங்கில் 58% உடை, காலணி மற்றும் அலங்கார பொருட்களிலும் 28% பிற பயன்பாட்டிலும் 16% மின்னணு உபகரணங்களிலும் செலவிடப்படுகின்றது.

Antony Ajay R

பொதுவாக பெண்கள் அதிகமாக பொருட்களை வாங்கிக்குவிப்பார்கள் என்ற கருத்து நிலவுகிறது. 'ஷாப்பிங்' என்ற சொல்லே ஒரு பெண்பால் சொல்லாக கருதப்படும் அளவு ஸ்டீரியோடைப் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் புதிய ஆய்வு ஒன்று இதனைக் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆண்கள் அதிக பணம் செலவிடுவதாக கூறப்பட்டுள்ளது.

 IIM-Ahmedabad பல்கலைக்கழகம் மேற்கொண்ட இந்த ஆய்வில் 25 மாநிலங்களைச் சேர்ந்த 35000 பேர் கலந்துகொண்டனர்.

'டிஜிட்டல் சில்லறை சேனல்கள் மற்றும் நுகர்வோர்: இந்தியப் பார்வை' (Digital Retail Channels and Coustomers: Indian Perspective) என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் பெண்களை விட ஆண்கள் 36% அதிக பணம் செலவழிப்பது தெரியவந்துள்ளது. அதாவது பெண்கள் 1,830 ரூபாய் செலவிடும் நேரத்தில் ஆண்கள் 2,484 ரூபாய் செலவிடுகின்றனர்.

ஆன்லைன் ஷாப்பிங்கில் 58% உடை, காலணி மற்றும் அலங்கார பொருட்களிலும் 28% பிற பயன்பாட்டிலும் 16% மின்னணு உபகரணங்களிலும் செலவிடப்படுகின்றது.

ஆண்கள் அதிக பணம் செலவழித்தாலும் பெண்கள் 35 நிமிடங்கள் செலவிடுகையில் ஆண்கள் 34.4 நிமிடங்கள் செலவிடுகின்றனர். இது மிகப்பெரிய வித்தியாசம் இல்லை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?