நாடாளுமன்ற வளாகத்தில் புகைகுண்டு வீச்சு - எம்.பிக்கள் சொல்வதென்ன? Twitter
இந்தியா

Parliament Security Breach: நாடாளுமன்றத்தில் புகைகுண்டு வீச்சு - எம்.பிக்கள் சொல்வதென்ன?

Antony Ajay R

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அவையில் இன்று சூழலில் பாதுகாப்பு மீறல் நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நாடாளுமன்ற கேலரியில் இருந்து அத்துமீறி உள்ளே குதித்த இரண்டு நபர்கள் புகைவரும் பொருளை வீசியுள்ளனர்.

2001ம் ஆண்டு நாடாளுமன்றம் தாக்குதலுக்கு உள்ளானதன் 22வது ஆண்டு நினைவு தினம் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் மதியம் 2 மணிவரை நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

"கேலரியில் இருந்து குதித்த இருவர் புகை வரும் குண்டை வீசினர். அவர்களை எம்.பிக்கள் பிடித்துவிட்டனர். பாதுகாப்புபடையினர் அழைத்துச் சென்றனர்" என காங்கிரஸ் தலைவர் அதிர் ராஜன் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

"இங்கு வரும் பத்திரிகையாளர்களும் பார்வையாளர்களும் டேக் வைத்திருப்பதில்லை. அரசு இதனை கவனிக்க வேண்டும். இது பாதுகாப்பு குறைபாடு. நாடாளுமன்றத்துக்குள் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்..." எனப் பேசியுள்ளார் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த டிம்பிள் யாதவ்.

2001ம் ஆண்டு இதே நாளில் (13.12.2001) 5 பயங்கரவாதிகள் நாடாளுமன்ற வளாகத்தில் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

பாதுகாப்பு படையினரின் எதிர்தாக்குதலில் 5 பேரும் கொல்லப்பட்டனர்.

30 நிமிடங்கள் நீடித்த இந்த சண்டையில் 9 பாதுகாப்புபடை வீரர்கள் உயிரிழந்தனர்.

இன்று காலையில் நாடாளுமன்ற தாக்குதலில் இறந்த வீரர்களுக்கு பிரதமர் உள்பட அனைவரும் நினைவஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?