Patal Bhuvaneshwar Cave, where the secret of the end of the world is hidden! Twitter
இந்தியா

உலகம் அழியும் ரகசியத்தை மறைத்து வைத்திருக்கும் மர்ம குகை - இந்தியாவில் எங்கே இருக்கிறது?

NewsSense Editorial Team

தமிழகத்தில் உள்ள குணா குகை, பல்லவன் குகைகள் போன்றவை பண்டைய கால பாரம்பரியம் மற்றும் கலாச்சாரங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாக இருக்கிறது. அதே வேளையில் இந்த இடங்கள் மக்கள் பொழுதுபோக்கக்கூடிய சிறந்த சுற்றுலாத் தளமாகவும் விளங்குகிறது.

இது போன்ற குகைகள் இந்தியா முழுவதும் உள்ளது. அவற்றில் மிகவும் பிரபலமானது உத்தரகாண்டில் அமைந்துள்ள பாதல் புவனேஷ்வர் குகைக் கோயில்.

பல்வேறு அதிசயங்கள் நிறைந்த இந்த குகையில் பண்டைய காலத்து புராணங்களின் குறிப்புடன் ஒரு ரகசியமும் பாதுக்கப்படுகிறதாம். அதாவது, பாதல் புவனேஷ்வர் குகைக் கோவிலின் கருவறையில் உலகம் அழியும் ரகசியம் மறைந்திருப்பதாக நம்பப்படுகிறது.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 90 அடிக்கு கீழே அமைந்துள்ள இந்த கோவில் அயோத்தியை ஆண்ட சூரிய வம்சத்தின் மன்னன் ரிதுபர்ணனால் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அரசர் ரிதுபர்ணன் பாம்புகளின் அரசனான ஆதிசேஷனை இந்த இடத்தில் தான் சந்தித்ததாக நம்பிக்கை இருக்கிறது.

இதையடுத்து, துவாபர் யுகத்தில் பாண்டவர்கள் இந்த குகையை மீண்டும் கண்டுபிடித்ததாகவும், அவர்கள் இந்த இடத்தில் வழிபாடுகளை மேற்கொண்டதாகவும் நம்பப்படுகிறது.

புவனேஷ்வரில் வசிக்கும் சிவபெருமானை தரிசிக்க மற்ற அனைத்து கடவுள்களும், தெய்வங்களும் இந்த இடத்திற்கு வருவதாக புராணங்கள் கூறுகிறது.

மேலும், கலியுகத்தில் ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியார் செம்பு சிவலிங்கத்தை நிறுவிய போது இந்த குகையை கண்டுபிடித்ததாக சொல்லப்படுகிறது.

இந்த குகைக் கோவிலில் ரணத்வார், பாப்த்வார், தர்மத்வார் மற்றும் மோக்ஷத்வார் என நான்கு வாயில்கள் உள்ளன. மன்னன் ராவணன் கொல்லப்பட்டபோது ​​பாப்த்வார் வாயிலும், மகாபாரதப் போருக்குப் பிறகு ரணத்வார் வாயிலும் மூடப்பட்டதாக புராணங்கள் கூறுகிறது.

மேலும், விநாயகப் பெருமானின் துண்டிக்கப்பட்ட தலை இக்கோயிலில் இருக்கிறதாம்.

முக்கியமாக, பாதல் குகையில் சிவலிங்கம் ஒன்று வளர்ந்து வருவதாகவும், அந்த லிங்கம் வளர்ந்து குகையின் உச்சத்தை தொடுகையில் உலகம் அழிந்து விடும் என்றும் ஒரு நம்பிக்கை இருக்கிறது!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?