மனைவியை சமாதானம் செய்ய லீவு கேட்ட போலீஸ் - இணையத்தில் வைரலாகும் லீவ் அப்லிகேஷன் ட்விட்டர்
இந்தியா

மனைவியை சமாதானம் செய்ய விடுப்பு கேட்ட போலீஸ் - இணையத்தில் வைரலாகும் லீவ் அப்ளிகேஷன்

சௌத்ரியின் மனைவி தன் மேல் கோபமாக இருப்பதாகவும், தன்னுடன் பேசுவதில்லை எனக் கூறி அவரை சமாதானம் செய்ய மேலதிகாரியிடம் லீவு கேட்டுள்ளார். சௌத்ரிக்கு விடுப்பு அளிக்கப்படுவதில்லை, இதனால், மனைவியுடன் அவரால் நேரம் செலவிட முடிவதில்லை என்பது மனைவியின் குற்றச்சாட்டு.

Keerthanaa R

தன் மனைவி கோபமாக இருப்பதாகவும் அவரை சாமாதானம் செய்யவேண்டும் எனக் கூறி மேலதிகாரியிடம் விடுப்பு கேட்டுள்ளார் போலீஸ் அதிகாரி ஒருவர்.

மருத்துவம் மற்றும் காவல்துறை பணிகளில் இருப்பவர்களுக்கு விடுப்பு என்பது நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒரு விஷயம். தங்களது சொந்த விருப்பு வெறுப்புகளை துறந்து கடமையை மட்டுமே மனதில் நிறுத்தி அவர்கள் பணியாற்ற வேண்டும்.

அவர்களுக்கும் குடும்பம், தனிப்பட்ட வேலைகள் இருக்கும் என்பது, அவ்வப்போது இதுபோல நடக்கும் சம்பவங்கள் நமக்கு நினைவுப்படுத்துகின்றன.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த காவலர் கௌரவ் சௌத்ரி. இவருக்கு கடந்த மாதம் திருமணம் நடைப்பெற்றது.

மாவு என்ற இடத்தை சேர்ந்த சௌத்ரிக்கு, உத்தரபிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் என்ற ஊரில் உள்ள நௌதான்வா காவல் நிலையத்தில் பணி. இதனால், வீட்டைவிட்டு தனித்து வசித்து வருகிறார் சௌத்ரி.

சௌத்ரியின் மனைவி தன் மேல் கோபமாக இருப்பதாகவும், தன்னுடன் பேசுவதில்லை எனக் கூறி அவரை சமாதானம் செய்ய மேலதிகாரியிடம் லீவு கேட்டுள்ளார். சௌத்ரிக்கு விடுப்பு அளிக்கப்படுவதில்லை, இதனால், மனைவியுடன் அவரால் நேரம் செலவிட முடிவதில்லை என்பது மனைவியின் குற்றச்சாட்டு.

மனைவியுடன் பல முறை பேச சௌத்ரி முயற்சித்ததாகவும், ஆனால் தன்னுடன் அவர் பேசாமல், சௌத்ரியின் தாயாரிடம் ஃபோனைக் கொடுத்துவிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனால் தனக்கு 7 நாட்கள் விடுமுறை வேண்டும் எனக் கேட்டு விண்ணப்பத்திருக்கிறார். உண்மையைக் கூறி லீவு கேட்டதனால், சௌத்ரியின் நேர்மையை பாராட்டி, ஐந்து நாட்கள் லீவு கொடுத்து உத்தரவிட்டார் காவல்துறை உதவி கண்காணிப்பாளர். சௌத்ரியின் விடுமுறை விண்ணப்பம் இணையத்தில் வைரலாகி வருகிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?