இந்தியர்களுக்கே அனுமதியில்லாத இந்திய பகுதிகள் - எந்தெந்த இடங்கள் தெரியுமா? Twitter
இந்தியா

இந்தியர்களுக்கே அனுமதியில்லாத இந்திய பகுதிகள் - எந்தெந்த இடங்கள் தெரியுமா?

என்னதான் இந்தியாவில் நினைத்த இடங்களுக்கு யார் வேண்டுமானாலும் செல்ல தடையில்லை என்றாலும், சில இடங்களை காண இந்தியர்களுக்கே அனுமதி மறுக்கப்படுகிறது. என்னென்ன இடங்கள் என்று இங்கே தெரிந்துகொள்வோம்.

Priyadharshini R

இந்தியா பல்வேறு கலாச்சார மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை கொண்டுள்ளது. இங்கு இருக்கும் ஒவ்வொரு இடங்களையும் உள்நாட்டினர் மட்டுமில்லாமல் வெளிநாட்டினரும் இந்தியாவை சுற்றிப்பார்க்க வருகின்றனர்.

இந்தியாவில் மொத்தம் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்துவமான வரலாற்றை கொண்டுள்ளது.

இந்தியாவிலேயே சுற்றிப் பார்க்க பல இடங்கள் கொட்டிகிடக்கின்றன.

என்னதான் இந்தியாவில் நினைத்த இடங்களுக்கு யார் வேண்டுமானாலும் செல்ல தடையில்லை என்றாலும், சில இடங்களை காண இந்தியர்களுக்கே அனுமதி மறுக்கப்படுவது குறித்து உங்களுக்கு தெரியுமா?

இந்தியாவின் முக்கியமான எல்லை பகுதிக்கு அருகில் அமைந்துள்ள இடங்களுக்கு செல்ல ILP எனப்படும் ‘உள்நாட்டு நுழைவு அனுமதி’ சீட்டு அவசியம் ஆகிறது.

அந்த வகையில் இந்தியாவிற்குள் இந்தியர்களிடம் இந்த ILP அனுமதி சீட்டு கேட்கும் இடங்கள் குறித்து பார்ப்போம்.

நாகாலாந்து

மியான்மர் நாட்டின் எல்லைப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள நாகாலாந்து நாட்டிற்குள் நுழைய, ILP அனுமதி பெற வேண்டும். மக்கள் கூட்டத்தை கட்டுபடுத்தவும், அங்கு வசிக்கும் பழங்குடி சமூக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

அருணாச்சல பிரதேசம்

மியான்மர், பூட்டான் மற்றும் சீனாவுடன் எல்லையை பகிர்ந்துக்கொள்ளும் அருணாச்சல பிரதேசத்திற்கு செல்ல விரும்புவோர், அருணாச்சலப் பிரதேச அரசின் குடியுரிமை ஆணையரிடம் உள்நாட்டு நுழைவு அனுமதி சீட்டை பெற வேண்டும்.

சிக்கிம்

பதற்ற நிலையிலேயே இருக்கும் சிக்கிம் பகுதியின் அமைதி நிலையை உறுதிப்படுத்தும் நோக்கில் ILP அனுமதி சீட்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதாவது, இம்மாநிலத்தில் அமைந்துள்ள சோம்கோ ஏரி, லாச்சுங், கோசாலா ட்ரெக், நாதுலா உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல அனுமதியை பெறுவது அவசியம்.

மிசோரம்

பங்களாதேஷ் நாட்டின் எல்லையை பகிர்ந்துக்கொள்ளும் மிசோரம் பகுதிக்கு பயணம் செய்ய விரும்புவோர் அம்மாநில அரசின் குடியுரிமை ஆணையரிடம் ILP அனுமதி பெற வேண்டும்.

லட்சத் தீவுகள்

லட்சத் தீவு செல்ல விரும்பும் மக்கள் அனைவரும் ILP அனுமதி சீட்டு பெறவேண்டியது அவசியம். இந்த அனுமதி சீட்டு 5 மாதத்திற்கு செல்லுபடியாகும். இது இலசமாகவும் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது.

மணிப்பூர்

மணிப்பூருக்கு பயணம் செய்ய விரும்புவோர், முறையாக ILP அனுமதி சீட்டு பெறவேண்டியது அவசியம்.

மேகாலயா

மேகாலயாவிற்கு செல்ல விரும்பும் அனைவரும் அனுமதி சீட்டை வாங்க வேண்டும். இந்த மாநிலத்தில் 24 மணி நேரத்திற்கு மேல் தங்க விரும்பும் பயணிகள் கட்டாயம் நுழைவு சீட்டை வாங்க வேண்டும்.

லடாக்

காஷ்மீரில் உள்ள லடாக் , பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் எல்லையை பகிர்ந்துக்கொள்கிறது. இங்கு செல்ல விரும்பும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக ‘உள்நாட்டு நுழைவு அனுமதி’ வாங்குவது கட்டாயம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?