India Heritage sites Canva
இந்தியா

75வது சுதந்திர தினவிழா : இந்தியாவின் இந்த இடங்களை பார்த்திருக்கிறீர்களா?

இந்த ஆண்டு சுதந்திர தின விடுமுறையைக் கழிக்க, பின்வரும் இடங்களில் ஏதேனும் ஒன்றிற்குப் பயணம் செய்யலாம்

NewsSense Editorial Team

சுதந்திர தினத்தை ஒட்டி, நீண்ட வீக்கெண்ட் வரவிருக்கும் நிலையில், விடுமுறையை அனுபவிக்க திட்டமிருந்தால், இந்தியாவின் வரலாற்றை கண்டுகளிக்க முயற்சி செய்யுங்கள். இந்தியாவின் பரந்த கலாச்சார மற்றும் புவிசார் குறியீடுகளையும், நமது நாட்டின் சாதனைகளையும் அறிந்து பெருமிதம் கொள்வதற்கும் சிறிது நேரம் ஒதுக்குங்கள்.

இந்த ஆண்டு சுதந்திர தின விடுமுறையைக் கழிக்க, பின்வரும் இடங்களில் ஏதேனும் ஒன்றிற்குப் பயணம் செய்யலாம்

1. விசாலம், கானாடுகாத்தான், தமிழ்நாடு

கானாடுகாத்தான், செட்டிநாடு கிராமத்தில் அமைந்துள்ளது இந்த அழகிய 15 அறைகள் கொண்ட பாரம்பரிய அரண்மனை. 19 ஆம் நூற்றாண்டின் செட்டியார் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளலாம்.

விசாலம் அரண்மனை 100 ஆண்டு கால அன்பின் உழைப்பாகும். ஒரு தந்தை தனது மூத்த மகளுக்கு அளித்த பரிசு. சொத்தில் பெண்களுக்கு உரிமை இல்லாதிருந்த அந்தக் காலத்தில் இந்த செய்கை, ஒரு முற்போக்கான மற்றும் அரிதான நிகழ்வாக இருந்தது. இந்த செட்டியார் இல்லத்தில், பர்மிய தேக்கு மரவேலைபாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அலங்கரிக்கப்பட்ட கூரைகள், ஐரோப்பா மற்றும் தூர கிழக்கு நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட சரவிளக்குகள், பெல்ஜியம் கண்ணாடி வேலைப்பாடு, இத்தாலிய பளிங்கு மற்றும் அழகான, கையால் செய்யப்பட்ட ஓடுகள் மற்றும் குளம் ஆகியவற்றை கொண்டிருக்கிறது. மேலும், பாரம்பரிய செட்டிநாடு வணிகர்களின் பயணங்கள், ஆய்வுகள், உலகளாவிய வடிவமைப்பு மற்றும் அழகியல் உணர்வுகளுக்கு இந்த விசாலம் ஒரு முக்கியமான சான்றாகும்.

2. சமோட் ஹவேலி, ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் பற்றி பேசும்போது, சமோட் ஹவேலியை தவறவிட்டால் அது முழுமையாகாது. சுமார் 200 ஆண்டுகள் பழமையான சமோட் ஹவேலியின் பழைய நகரமான ஜெய்ப்பூரில் அமைந்துள்ள ராஜ்புதானா விருந்தோம்பலின் உண்மையான பிரதிபலிப்புகளில் ஒன்றாக விளங்குகிறது. அழகான சுவரோவியங்கள், சுமார் 100 ஆண்டுகள் பழமையானவையாகும்.

அதுமட்டுமல்லாமல், வண்ணமயமான கலை மற்றும் அலங்காரங்கள், நேர்த்தியான அறைகள் மற்றும் பூகன்வில்லா விளிம்பு முற்றங்கள், மொட்டை மாடிகள் போன்றவை கண்பதற்கரிய சிறந்த காட்சிகள் ஆகும். உள்ளூர் ராஜஸ்தானி உணவு வகைகள் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். சைவ, அசைவ பிரியர்களுக்கும், மற்ற சர்வதேச உணவுகளை விரும்புபவர்களுக்கும் இங்கு சிறந்த உணவகங்கள் இருக்கின்றன.

மேலும், இந்த பழைய நகரத்தைச் சுற்றி காலை நடைப்பயிற்சி உங்களை உற்சாகமாக்கும். நகர சந்தைகள், அருங்காட்சியகங்கள் ஆகியவை உங்கள் விடுமுறை பயணத்தை அர்த்தமுள்ளதாய் மாற்றும்.

3. ஜெஹான் நுமா அரண்மனை, போபால்

போபால் நகரமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் சிறப்பான கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டவையாகும். சுத்தமான சாலைகள், நேர்த்தியான கட்டிடக்கலை (தாஜ்-உல்-மஸ்ஜித் மற்றும் பிற), பசுமையான சமவெளிகள் மற்றும் நீர்நிலைகள் ஆகியவற்றை ஒருங்கே பெற்ற பாரம்பரியம் கொண்ட இடமாகும். இலக்கியம் மற்றும் கலைகளை வளப்படுத்துவதில் அதிகளவு முக்கியத்துவம் தரப்படுவதை நீங்கள் காணலாம். உள்ளூர் பழங்குடியினருக்கான மரியாதையை, பழங்குடியினர் அருங்காட்சியகத்தில் காணலாம்.

இது பேகம்களின் நிலம் என்று அழைக்கப்படுகிறது. காரணம், இது 400 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்களால் ஆளப்பட்டது. சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் Begumகளின் தத்துவத்தை முன்னோக்கி கொண்டு செல்வதில் ஜெஹான் நுமா அரண்மனை மற்றும் ஜெஹான் நுமா ரிட்ரீட் மற்றும் அவர்களுக்கு பின்னால் உள்ள மக்கள் முக்கிய பங்காற்றுகின்றனர்.

நகரின் மையமாக இருக்கும் ஜெஹான் நுமா அருங்காட்சியகம், போபால் மற்றும் அரச குடும்பத்தின் தனித்துவமான வரலாற்றைத் தாங்கி நிற்கிறது. நகர முன்னேற்றதில் அவர்களின் ஈடுபாடுகள் மற்றும் முயற்சிகளைக் அது சொல்கிறது. ஜெஹான் நுமா அரண்மனை போபாலின் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு ஒத்ததாக இருக்கிறது. அதனால் அனைத்து சுற்றுலா பயணங்களும் அதன் வாசலிலிருந்தே தொடங்குகின்றன.

4. சித்தூர் கொட்டாரம், கொச்சி, கேரளா

200 ஆண்டுகள் பழமையான இந்த மன்னரின் வசிப்பிடத்தின் ஒவ்வொரு அங்குலமும் கேரள மண்ணுக்குரிய ஆடம்பரத்தையும், நேர்த்தியையும் குறிக்கின்றன. கொச்சி ராஜாவால் அவரது குலதெய்வக் கோயிலுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இது கட்டப்பட்டது.

இந்த பாரம்பரிய தளத்திற்கு, கேரள கடற்புறத்தின் வழியே பயணம் மேற்கொள்வதென்பது ஒரு அற்புதமான காலத்திற்கு இட்டுச்செல்கிறது. இந்த இடம் லேடி ஹான் அறக்கட்டளையால் மீட்டு, புத்துயிர் தரப்பட்டது. சுற்றுச்சூழல் எழில் மிக்க இவ்விடத்தில், மிகவும் அழகுடன் அலங்கரிக்கப்பட்ட, 3 படுக்கையறைகள் மற்றும் மர ஜன்னல்கள், ஒரு அழகான வராண்டா, கொல்லைப்புறம் உட்கார்ந்து, ஓய்வெடுக்கப் பசுமையான சூழலுடன் காணப்படுகிறது.
பலதரப்பட்ட உணவு ரசனைக்கு ஏற்றவாறு, கவனமாக உருவாக்கப்பட்ட உணவுகளை இங்கே ருசித்து மகிழலாம். மேலும் பாரம்பரிய காரியஸ்தான் (அரச பராமரிப்பாளர்) மெர்வின், அரண்மனையின் கதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வது, புதிய அனுபவமாக இருக்கும்.

யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட நகரமான ஃபோர்ட் கொச்சியை அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாறு மற்றும் உணவு வகைகளுக்காக மட்டுமே கட்டாயமாக காண வேண்டும். வரலாற்று ஆர்வலர்கள் முசிரிஸ் தொல்பொருள் அருங்காட்சியகத்திற்குச் சென்று பழம்பெரும் சமூகத்தின் மேன்மைகளை கண்டுணரலாம்.

5. ஸ்பைஸ் கோஸ்ட் கப்பல்கள்

கேரளாவில் னீங்கள் இதுவரை மேற்கொள்ளாத வித்தியாசமான இடங்களை பார்க்க வேண்டுமெனில், இங்கே செல்லுங்கள். பல நூற்றாண்டுகளாக இந்த கேரள நீர்வழிகளில் அரிசி மற்றும் மசாலாப் பொருட்களை ஏற்றிச் சென்றனர். CGH எர்த் ஸ்பைஸ் கோஸ்ட் குரூஸ் இந்த பாரம்பரிய படகுகளை அழகிய மிதக்கும் ஹோட்டல்களாக கேரளாவின் கடல் கலாச்சாரம் மற்றும் இயற்கை பாரம்பரியத்தின் உண்மையான அனுபவங்களை வழங்குகிறது.


ஒரு தனியறை மற்றும் இரட்டை அறைகள் கொண்ட வசதியோடு, அமைதியான நீர் காட்சிகளுடன் பாரம்பரியமாக மிகவும் ஆடம்பரமான ஒரு பயண அனுபவத்தை இது வழங்குகிறது. சிறந்த உணவு வகைகள், நீர்வழிகள் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கும் மக்களின் கதை மற்றும் வாழ்க்கை முறைகளை நேரடியாக நீங்கள் காணலாம். CGH நேர்த்தியான படகுகளில் சில அசாதாரண பயணங்களை வழங்குகிறது. இந்தப் பயணம் ஒரு தனித்துவமான அனுபவமாகும். ஸ்டாண்டப் துடுப்பு மற்றும் கேனோயிங் போன்ற நீர் விளையாட்டுகள் இதன் சிறப்பான கொண்டாட்டங்களில் ஒன்றாகும்.

6. ஃபஸ்லானி நேச்சர்ஸ் நெஸ்ட், லோனாவ்லா, மகாராஷ்டிரா

கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமை நிறைந்த மேற்குத் தொடர்ச்சி மலைகளின் கம்பீரமான அழகைக் காண இங்கே விரையுங்கள். மகாராஷ்டிராவில் உள்ள லோனாவாலாவில் உள்ள தக்வே என்ற அமைதியான குக்கிராமத்தில் நீலமான ஏரி நீருக்கு அருகில் பசுமையான புல்வெளிகள் அற்புதமான அனுபவத்தை வழங்குகின்றன.

மும்பை மற்றும் புனே இடையே வசதியாக அமைந்துள்ள இந்த ரிசார்ட் அங்கீகரிக்கப்பட்ட மாற்று மருத்துவக் கொள்கைகளின் ஒருங்கிணைந்த சிகிச்சைமுறைகளில் கவனம் செலுத்துகிறது. ஒவ்வொரு விருந்தினருக்கும் அவர்களின் வாழ்க்கை முறையை சீரான ஆரோக்கிய நிலைக்கு சீரமைக்க உண்மையான சிகிச்சைகள் இங்கே வழங்கப்படுகின்றன. ஃபஸ்லானி நேச்சர்ஸ் நெஸ்டில் வழங்கப்படும் சில சிகிச்சைகள் தனித்தன்மை வாய்ந்தவையாகும். "குதிரை சிகிச்சை" போன்ற தனித்துவமான அனுபவங்களை இந்த ரிசார்ட் வழங்குகிறது.

பல்வேறு சர்வதேச சிறந்த விற்பனையாளர்கள் மற்றும் உள்ளூர் சுவையான உணவு வகைகளிலிருந்து நீங்கள் ஒரு பிரமாதமான சாப்பாட்டு அனுபவத்தைப் பெறலாம்.

7. மேன்ஷன் ஹவுஸ், கோவா

மேன்ஷன் ஹவுஸ் என்பது ஒரு பாரம்பரியம் மிக்க ஆடம்பர பங்களாவாகும். இது 18 ஆம் நூற்றாண்டின் குடும்ப குடியிருப்பு கெஸ்யா டி ப்ரகன்சா என்பவரால் மீட்டெடுக்கப்பட்டது. இந்த அழகிய முன்னாள் போர்த்துகீசிய காலனியின் மாயாஜால கலை நுணுக்கத்தை அனுபவிக்க ஒரு சிறந்த இடமாகும். அதன் காலம் கடந்து நிற்கும் கட்டிடக்கலை, க்யூரேட்டட் காஸ்ட்ரோனமிக் பயணங்கள் மற்றும் கோவாவின் மிகவும் சுறுசுறுப்பான சுற்றுப்புறம் ஆகியவை இணைந்து உங்களை மயக்கும்.

அமைதியான சூழலை வழங்கும் வகையில் இந்த பங்களா வடிவமைக்கப்பட்டுள்ளது. வரலாறு, கலை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் உயர்ந்து நிற்கும் அதே வேளையில், ஒரு வீட்டின் அனைத்து வசதிகளையும், தனிமையையும், பரிச்சயத்தையும் வழங்குகிறது. உலகத் தரம் வாய்ந்த விருந்தோம்பல் ஒரு அன்பான மனித தொடர்பையும், அனுபவமிக்க விருந்தோம்பலையும் வழங்குகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?