சோம்னாத்: twitter
இந்தியா

Gujarat: படிக்கிணறு முதல் கண்ணாடி அரண்மனை வரை- 5 கண்கவர் Travel Destinations!

நவம்பர், டிசம்பர் மாதங்களில் நம் மனதை இலகச் செய்யும், இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலங்களில் ஒன்று குஜராத். அதில் முக்கியமாக பார்க்கவேண்டிய 5 இடங்கள் இதோ

Keerthanaa R

சுற்றுலா என்றாலே குதூகலித்துப்போகும் நமக்கு, எங்கு எப்போது செல்லவேண்டும் என்ற குழப்பம் பல சமயங்களில் இருக்கிறது. உள்ளூரிலேயே சுற்றலாமா, இல்லை, இண்டர்னேஷனல் டூர் சென்று வரலாமா என்பது முக்கிய கேள்வி.

அப்படி குழம்புபவர்களுக்கு இந்தியாவிலேயே பார்க்கவேண்டிய நிறைய இடங்கள் இருக்கின்றன. சம்மரில் செல்லகூடிய தலங்கள், குளிர்காலத்தில் பார்க்கவேண்டிய இடங்கள் என, அதிலும் வெரைட்டிகள் உள்ளன.

நவம்பர், டிசம்பர் மாதங்களில் நம் மனதை இலகச் செய்யும், இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலங்களில் ஒன்று குஜராத்.

கிர் தேசிய பூங்கா முதல் துவாரகா கோவில் வரை, குஜராத்தின் அதிசயங்கள் ஏராளம்.

அதில் முக்கியமாக பார்க்கவேண்டிய 5 இடங்கள் இதோ!

சம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்கா:

வடோடராவிலிருந்து 50 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த இடம் 2004ல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது. பாவாகேத் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பகுதி தான் சம்பானேர்-பாவாகேத் என்றழைக்கப்படுகிறது.

இந்த மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள அரண்மனை கட்டிடங்கள், மசூதிகள் 8 ஆம் நூற்றாண்டு முதல் 14ஆம் நூற்றாண்டு வரையான காலத்தில் கட்டப்பட்டவை.

வரலாறு, கட்டிடக்கலை போன்றவற்றில் ஆர்வமுள்ளவர்கள் தவறாமல் பார்க்கவேண்டிய இடமாகும்.

ராணி கி வாவ் - பதான்

ராணியின் படிக்கிணறு என்றழைக்கப்படும் இந்த இடம், ராணி உதயமதி, இறந்த தன் கணவர் முதலாம் ராஜா பீம்தேவின் நினைவாக கட்டிய நினைவுச்சின்னமாகும். நூற்றுக்கணக்கான படிக்கட்டுகள் நிறைந்த இந்த கிணறு, கட்டுமானம் முடிந்த சில தினங்களிலேயே, வெள்ளத்தில் மூழ்கியது.

1980 நடந்த அகழ்வாராய்ச்சியில் தான் மீண்டும் கண்டெடுக்கப்பட்டது இந்த இடம். இந்தக் கிணறு 64 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் 27 மீட்டர் ஆழமும் கொண்டது.

பூஜ்:

கட்ச் மாவட்டத்தின் தலைநகரமான பூஜ், மன்னர் ராவ் ஹிமர்ஜி என்பவரால் 1510 நிறுவப்பட்டது. இங்கு சுவாமி நாராயண் கோவில் அமைந்துள்ளது மற்றும், பாந்தினி கைவினை பொருட்கள் சுங்கிடி சேலைகளுக்கு பெயர் பெற்றது பூஜ் நகரம்.

ஐனா மஹால் அல்லது கண்ணாடி அரண்மனை, பராக் மஹால், கட்ச் அருங்காட்சியகம், ஹமிர்சார் ஏரி ஆகிய இடங்கள் இங்கு பிரபலம்.

சோம்னாத்:

வாழ்நாளில் நிச்சயம் பார்க்கவேண்டிய சிவன் கோவில்களில் முதன்மையானது சோம்னாத் கோவில். சந்திரன் சிவனுக்காக இந்த கோவிலை எழுப்பியதாக வரலாறு சொல்கிறது. இந்த கோவில் முழுக்க முழுக்க தங்கத்தால் ஆனது.

பிற்காலங்களில் இதே கோவிலை ராவணன் வெள்ளியாலும், கிருஷ்ணர் மரத்தினாலும், பீம்தேவ் என்ற மன்னர் கற்களால் எழுப்பியதாக கதைகள் உள்ளன.

ரான் ஆஃப் கட்ச்:

அரபிக்கடலுக்கும் தார் பாலைவனத்துக்கும் இடையில் உள்ள ரான் ஆஃப் கட்ச் உப்பு மற்றும் மணலினால் ஆனது. இந்த இடத்தின் சிறப்பம்சமே மழைக்காலத்தில் தண்ணீருக்குள் மூழ்கியும், ஆண்டில் மீதமுள்ள 8 மாதங்களும் ஒரு வெள்ளை நிற பாலைவனத்தை போல காட்சியளிப்பது தான்.

இன்னுமொரு விஷயம்,

ரான் ஆஃப் கட்ச்சிற்கு சென்றால் நிச்சயமாக ஒட்டகச் சவாரி செய்யாமல் திரும்பவேண்டாம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

IndiaTravelTourismபயண காதல்

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?