மணிப்பூர் விவகாரத்தில் அமைதியின் வழி முடிவு எட்டப்படும் என்றும், அடுத்த ஆண்டு இந்த ஆகஸ்ட் 15 வரும்போது முன்னேறிய இந்தியாவை உங்கள் முன்னால் நிறுத்துவேன் என்றும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் பேசியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
இந்தியா சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார். பின்னர் தனது சுதந்திர தின உரையை ஆற்றினார் மோடி.
மோடி பிரதமராக பதவியேற்று தொடர்ந்து 10வது ஆண்டாக தனது சுதந்திர தின உரையை வழங்கியுள்ளார். தனது உரையில் என்ன பேசினார் மோடி?
மணிப்பூர் விவகாரம் குறித்து பேசிய பிரதமர் மோடி,
“மணிப்பூர் மக்கள் கடந்த சில நாட்களில் நினைக்க முடியாத அளவு வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர். பலர் உயிரிழந்துவிட்டனர்.
தாய்மார்களும், சகோதரிகளும் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர்.
நமது தேசமும் நானும் மணிப்பூர் உடன் துணை நிற்கிறோம். அவர்கள் சந்தித்த இன்னல்களுக்கு எல்லாம் அமைதியின் வழி தீர்வு காணப்படும்.” என்றார்.
தொடர்ந்து பேசியவர், விண்வெளி முதல், ஆழ்கடல் ஆராய்ச்சிகள் வரை, கிராமங்களின் மேம்பாட்டு திட்டங்கள் வரை, இந்தியாவின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு துறையிலும் அரசு பணியாற்றிக்கொண்டிருக்கிறது.
தேசத்தின் வளர்ச்சிக்காக அரசு பெருங்கனவுகள் கொண்டுள்ளது என்றவர், நாட்டில் பெண் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் கல்வி முதல் அவர்கள் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வரப்பட்டு உள்ளது
மோடி தனது உரையில் தேசத்தில் வாரிசு அரசியல் தலைவிரித்தாடுகிறது என்றும் பேசினார். மேலும் இந்தியா சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவடையும்போது, முற்றிலும் முன்னேறிய நாடாக இருக்கும் என்று கூறினார்.
”அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15ல் நான் உரையாற்ற வருகையில் இந்த ஆட்சியில் இந்தியா படைத்த சாதனைகள் மற்றும் கண்ட முன்னேற்றங்களை உங்கள் முன்னால் சமர்ப்பிக்கிறேன்” என்றார் மோடி.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp