Narendra Modi NewsSense
இந்தியா

அச்சத்தில் சீனா : வேகமாக ஓடும் இந்தியா - என்ன நடக்கிறது?

இப்படி விலை குறைவாக வெளிநாடுகளில் இருந்து ஸ்டீல் இந்திய சந்தைக்கு வருவதால், இந்திய உற்பத்தியாளர்களின் வியாபாரம் பாதிப்புக்குள்ளாகிறது. சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து கூட இந்தியாவுக்கு கணிசமான அளவுக்கு ஸ்டீல் இறக்குமதி செய்யப்படுவதாக அரசு வலைதளங்கள் சொல்கின்றன.

NewsSense Editorial Team

சீனாவின் கட்டுமானத்துறை ஒரு வித அச்சத்தில் உறைந்து கிடக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவோ ரெசசனை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது இந்தியா, உலக ஸ்டீல் டிமாண்டின் பாதுகாவலனாக உருவெடுத்து இருக்கிறது.

அடுத்த ஆண்டு, சீனாவை பின்னுக்குத் தள்ளி உலகிலேயே மிக அதிக மக்களைக் கொண்ட நாடு என்கிற இடத்தைப் பிடிக்கப் போகிறது இந்தியா. மறுபக்கம் கட்டடத் துறையிலும் வளர்ச்சிப் பாதையில் இருக்கிறது இந்தியா.

இந்தியாவின் சாலைகள், ரயில் கட்டமைப்புகள், துறைமுகங்கள் என பலவற்றையும் நவீனமயமாக்கும் திட்டத்தில் இருக்கிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. சீனாவோடு போட்டி போடும் வகையில் இந்தியாவை ஒரு உற்பத்திக் கேந்திரமாக உருவாக்கவும் மத்திய அரசு விரும்புகிறது.

இது அத்தனையும் ஸ்டீல் துறையின் டிமாண்டை சுமார் 6.7% அதிகரிக்கச் செய்யும். டன் கணக்கில் பார்த்தால், 2023ஆவது ஆண்டில் சுமார் 120 மில்லியன் டன் ஸ்டீல் தேவைப்படலாம். இது உலக அளவிலான பெரிய பொருளாதாரங்களில் இல்லாத மிகப்பெரிய ஸ்டீல் டிமாண்ட் என்கிறது உலக ஸ்டீல் சங்கம்.

ஏற்கனவே, சில ஆண்டுகளுக்கு முன்பே உலகின் மிகப்பெரிய ஸ்டீல் பயன்படுத்தும் நாடுகள் பட்டியலில், அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்தது நினைவுகூரத்தக்கது. தற்போது இப்பட்டியலில் சீனா முதலிடத்தில் இருக்கிறது.

எந்த ஒரு பொருளாதாரத்திலும் ஒரு நாட்டைக் கட்டமைக்க வேண்டுமானால் பெரிய அளவில் ஸ்டீல் தேவை. அப்படி ஒரு காலகட்டத்தில் தான் இந்தியா தற்போது இருக்கிறது.

கெளதம் அதானி

இந்தியாவில் ஸ்டீல் துறையில் நுழையும் அதானி குழுமம்

2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் ஸ்டீல் நுகர்வு 200 மில்லியன் டன்னைக் கூட கடக்கலாம் என, இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டீல் உற்பத்தியாளரான ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல் லிமிடட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெயந்த் ஆசார்யா கூறியுள்ளார்.

ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்தைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களும் தங்களின் உற்பத்தி அளவை அதிகரிக்க உள்ளனர். ஆர்சிலார் மித்தல் நிப்பான் ஸ்டீல் இந்தியா லிமிடட் என்கிற நிறுவனம், தன் உற்பத்தி அளவை 3 மடங்காக (30 மில்லியன் டன்னாக) அதிகரிக்க உள்ளதாக என் டி டிவி வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

தென் கொரியாவின் பாஸ்கோ ஹோல்டிங்ஸ் இன்க் மற்றும் அதானி குழுமம் இந்தியாவில் ஸ்டீல் துறையில் நுழைவது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள் என்றும் செய்திகளில் பார்க்க முடிகிறது.

இந்தியாவில் ஸ்டீல் உற்பத்தி

இந்தியாவில் கணிசமாக ஸ்டீல் உற்பத்தி செய்யப்பட்டாலும், இந்தியாவுக்குத் தேவையான ஸ்டீலை முழுமையாக இந்தியாவிலேயே உற்பத்தி செய்து கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது. எனவே இந்தியா தனக்குத் தேவையான ஸ்டீலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டி இருக்கிறது.

2022 ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் மட்டும் 3.1 மில்லியன் டன் ஸ்டீல் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக அரசு அமைப்புகள் சொல்கின்றன. இது கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் இறக்குமதி செய்த ஸ்டீலை விட 15% அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.

இப்படி விலை குறைவாக வெளிநாடுகளில் இருந்து ஸ்டீல் இந்திய சந்தைக்கு வருவதால், இந்திய உற்பத்தியாளர்களின் வியாபாரம் பாதிப்புக்குள்ளாகிறது. சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து கூட இந்தியாவுக்கு கணிசமான அளவுக்கு ஸ்டீல் இறக்குமதி செய்யப்படுவதாக அரசு வலைதளங்கள் சொல்கின்றன.

Indian economy

இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதை

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் போதும், சீனாவின் ஒட்டுமொத்த ஸ்டீல் நுகர்வோடு ஒப்பிடும் போது, இந்தியாவின் ஸ்டீல் நுகர்வு மிகக் குறைவாகவே இருக்கிறது.

அடுத்த ஆண்டு, இந்தியாவின் ஸ்டீல் நுகர்வு, சீனாவின் 914 மில்லியன் டன்னில் ஏழில் ஒரு பங்காக இருக்கும் என உலக ஸ்டீல் சங்கத்தின் தரவுகள் சொல்கின்றன. பிரதமர் நரேந்திர மோடியின் தேசிய கட்டமைப்புப் பணிகள் எத்தனை வேகமாக முன்னெடுக்கப்படுகிறதோ, அத்தனை வேகமாக இந்த இடைவெளியைக் குறைக்க முடியும்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று, ரியல் எஸ்டேட் பிரச்னைகள் காரணமாக, அடுத்த ஆண்டு சீனாவின் ஸ்டீல் டிமாண்ட் குறைவாக இருக்கும் என இக்ரா என்கிற தர மதிப்பீட்டு நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் ஜெயந்தா ராய் கூறியுள்ளார்.

சீனாவில் நிலவும் ரியல் எஸ்டேட் பிரச்னைகளில் இருந்து மீண்டு வருவது மற்றும் சீன அரசின் அடிப்படைக் கட்டுமானம் தொடர்பான கொள்கைகளைப் பொறுத்து அவர்களின் வளர்ச்சி இருக்கும் என்று கூறியுள்ளார் ஜெயந்தா ராய்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?