அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் தனது அமைச்சர் பதவியை இழந்துள்ளார்.
தமிழகத்தின் தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சரான பொன்முடி கடந்த 2006- 2011 திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வி மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமான அளவு சொத்து குவித்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் பல திருப்பங்களுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கான தண்டனையை மேல் முறையீட்டுக்காக 30 நாட்களுக்கு நிறுத்திவைத்துள்ளனர்.
எனினும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர் பதவி இழந்துள்ளார். அவரது திருக்கோவிலூர் தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அவர் வகித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பதவி யாருக்கு வழங்கப்படும் என்ற கேள்வியும் திமுக கட்சியுனுள் எழுந்துள்ளது.
தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளின் படி, அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு கூடுதலாக உயர் கல்வித்துறை அமைச்சர் பதவியும் வழங்கப்படும்.
பிற்படுத்தப்பட்டோர் நலன், கதர் கிராம தொழில்கள் துறையுடன் உயர்கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளை கூடுதலாக ராஜ கண்ணப்பன் கவனிக்கவுள்ளார்.
ராஜ கண்ணப்பன் 1991ம் ஆண்டு திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் சட்டமன்றத்தில் நுழைந்தவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் 1991-1996 வரை பொதுபணித்துறை அமைச்சராக இருந்தார்.
பின்னர் மக்கள் தமிழ் தேசம் என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார். 2001ம் ஆண்டு திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். 2006ம் ஆண்டு தனது கட்சியை திமுகவுடன் இணைத்துக்கொண்டார்.
2009ம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அப்போது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
பின்னர் மீண்டும் திமுகவில் இணைந்தவர், 2021ம் ஆண்டு முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2021 மே மாதம் போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்றவர், 2022 மார்ச் மாதம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பொறுப்பு மாற்றப்பட்டார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust