இந்தியாவை தன்னந்தனியாக சுற்றிப்பார்த்த நபர்- 18 மாதங்கள், 63,000 கிமீ கடந்து சாதனை! Twitter
இந்தியா

இந்தியாவை தன்னந்தனியாக சுற்றிப்பார்த்த நபர்- 18 மாதங்கள், 63,000 கிமீ கடந்து சாதனை!

Keerthanaa R

தனிமை விரும்பிகள் அதிகரித்துவிட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் தங்களை தேடும் பயணத்தில் இருக்கின்றனர். சுற்றுலா ஒரு மனிதன் தன்னைத்தானே அறிந்துகொள்வதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.

பூனேவை சேர்ந்த 42 வயதான டெஹ்சூன் கர்மலாவாலாவுக்கும் அப்படித்தான். இவர் தனி ஒரு மனிதனாக இந்தியாவை சுற்றிப்பார்த்துள்ளார். சுமார் 18 மாதங்கள் 60,000த்துக்கும் மேற்பட்ட கிலோமீட்டர் பல இடங்களுக்கு பயணித்து, இந்திய சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளார்.

எப்போது தொடங்கியது இவரது பயணம்? எங்கெல்லாம் சென்றிருக்கிறார்?

இந்தியாவின் பாரம்பரிய தலங்களை எல்லாம் காணவேண்டும் என்பது இவரது பயணத்தின் குறிக்கோள். அக்டோபர் 19, 2021ல் ஒரு ஸ்போர்ட்ஸ் யுட்டிலிட்டி வாகனத்தில் தனது சாகச பயணத்திற்காக புறப்பட்டார் கர்மாவாலா.

ரியல் எஸ்டேட் டெவலப்பரான இவருக்கு தன் பணியை விட்டுவிட்டு பயணம் மேற்கொள்வது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. கடினமான பருவமாற்றங்கள், கொரோனா, சில இடங்களுக்கு செல்ல அனுமதி மறுப்பு போன்ற இன்னல்களை சந்திக்க நேர்ந்தது.

இருப்பினும் மனம் தளராமல் தன் பயணத்தை நினைத்தபடி முடித்திருக்கிறார் கர்மலாவாலா.

ட்ராவல் செய்யலாம் என இவர் தயாரானபோது 2020ல் கோவிட் காரணமாக லாக்டவுன் போடப்பட்டது.

தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் கடந்த 2021ல் பயணத்தை ஆரம்பித்தார்.

சுமார் 18 மாதங்கள் நீண்ட இந்த பயணத்தில், 104 தேசிய பூங்காக்கள், 54 புலிகள் காப்பகம், 32 யானை காப்பகம், 17 உயிர்க்கோள காப்பகங்கள், 40 யுனெஸ்கோ பாரம்பரிய தலங்கள் ஆகியவற்றை கண்டுள்ளார்.

சுமார் 63,000 கிமீ இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு சென்றவர் கிட்டதட்ட 2,100 கிமீ தூரம் இவர் டிரெக்கிங் மூலம் கடந்துள்ளார். இவரது பயணத்தை இவர் படமாகவும் பதிவு செய்துள்ளார்

இமயமலை, கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகள், அந்தமான் தீவுகளுக்கும் சென்றுவந்தார் கர்மலாவாலா

இந்த பயணத்தின்போது இவரது பட்டியலில் இருந்த சில இடங்களுக்கு செல்ல அனுமதி பெறவேண்டியதாக இருந்துள்ளது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு சில இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டாலும், இவர் இந்த தனிப்பயணத்தை மேற்கொள்ளவேண்டும் என கடந்த 2014ல் கேரளா சென்றபோது தான் தோன்றியுள்ளது. இந்தியாவின் இணையில்லா அழகை கண்டு ரசிக்கவேண்டும் என்பதே இவரது குறிக்கோளாக இருந்துள்ளது.

ஆனபோதிலும், கேம்ப்பெல் பே தேசிய பூங்கா மற்றும் கிரேட் நிக்கோபார் தீவில் உள்ள கலாத்தியா தேசிய பூங்கா ஆகியவற்றை பயண வரம்புகள் காரணமாக அவரால் சென்று பார்க்க முடியவில்லை.

எனினும் இனிதே தன் பயணத்தை முடித்துள்ளார். இவரது இந்த சாதனையை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் உலக சாதனைகள் இந்தியாவின் மிக நீண்ட தொடர்ச்சியான ஆய்வுப் பயணம் என அங்கீகரித்துள்ளது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?