இந்தியாவிலுள்ள ஃபேமஸ் மானுமென்ட்களில் ஒன்று குதுப் மினார். இதை எழுப்பியவர் குதுப் அல்-தின் ஐபக். 1199-1220-க்குள் கட்டப்பட்ட தென் ஆசியாவின் முதல் இஸ்லாமிய கோபுரமாகும் இது. குதுப் மினார் யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்று.
ஆனால் இந்த குதுப்மினாரை கட்டியது குதுப் அல்-தின் ஐபக் அல்ல ராஜா விக்கிரமாதித்தன் தான் என்று கூறியுள்ளார் முன்னாள் இந்தியத் தொல்லியல் துறை அதிகாரியான தரம்வீர் சர்மா. ஏஎஸ்ஐ சார்பாக பல முறை இங்கு தொல்லியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ள தரம்வீர் சர்மா 5 ஆம் நூற்றாண்டில் இந்த கோபுரத்தை ராஜா விக்ரமாதித்தன் சூரியனின் திசை மாற்றங்களைக் கண்காணிக்க கட்டியதாகவும், அதற்காக 25 இன்ச் டில்ட் (tilt) ஒன்று இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
"சூரியனைக் கண்காணிக்கச் செய்யப்பட்டதால் தான், ஜூன் 21-ம் தேதி, சங்கராந்தியின் இடப்பெயர்ச்சிக்கு இடையில், குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது அந்த பகுதியில் நிழல் விழாது. இது அறிவியல் மற்றும் தொல்லியல் உண்மை. " மேலும் குதுப் மினாரில் உள்ள வாயிற்கதவு வடக்கு நோக்கி இருப்பதும், இது இரவு நேரத்தில் துருவ நட்சத்திரத்தை காண ஏதுவாக வைக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust