காங்கிரஸ் கட்சியில் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியதனால் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டு, ராகுல் காந்திக்கு எதிராக தீர்ப்பு வந்தது.
சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது ராகுல் காந்தியின் அரசியலிலும், காங்கிரஸ் கட்சியிலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
வயநாடு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ராகுல் காந்தி, "இந்திய அரசியலமைப்பின் 102(1)(e) பிரிவின் விதிகளின்படி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 8 -ன் கீழ் தண்டனைப் பெற்றதனால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்படுகிறார்" என நாடாளுமன்ற அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
" இந்த முடிவு தவறானது. லோக்சபா செயலகம் எம்.பி.யை தகுதி நீக்கம் செய்ய முடியாது. தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசித்து குடியரசுத் தலைவர் அதைச் செய்ய வேண்டும்." என காங்கிரஸ் தலைவர் மனிஷ் திவாரி கூறியுள்ளார்.
"நீதிமன்றத் தீர்ப்பு வெளியான 24 மணி நேரத்திற்குள், மேல்முறையீடு செய்யப்படுவது தெரிந்தும், இத்தனை வேகமாக ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது"
என மூத்த காங்கிரஸ் உறுப்பினர் சசி தரூர் கூறியுள்ளார். மேலும் அவர் இது "ஜனநாயகத்துக்கு கேடு விளைவிக்கக் கூடியது” என்றும் கூறியுள்ளார்.
தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிட்யினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் உரையாற்ற அனுமதிக்காதது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார் அந்த கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
"ராகுல் காந்தி, மோடி மற்றும் அதானி குறித்து பேசியது முதல் அவரது வாயை அடைப்பதற்காக இந்த மாதிரியான செயல்களை பாஜக செய்து வருகிறது. இது ஜனநாயகத்துக்கு புறம்பானது மற்றும் சர்வாதிகார நடவடிக்கை" என விமர்சித்துள்ளார் காங்கிரஸ் எம்.பி கே.சி வேணுகோபால்.
இதற்கிடையில் ”ராகுல் காந்தி பேசியது பி.சி பிரிவு மக்களுக்கு விரோதமானது. அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலடி கொடுத்த மல்லிகார்ஜுன கார்கே "பணத்துடன் நாட்டை விட்டு ஓடியவர் குறித்து எங்கள் கட்சி கேள்வி எழுப்புகையில், பிரச்னையை மடைமாற்றும் நடவடிக்கைகளை பாஜக மேற்கொள்கிறது" என்றார்.
"இன்று மாலை 5 மணிக்கு கட்சி அலுவலகத்தில் எங்களது மூத்த தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம். இந்தக் கூட்டத்தில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எங்களுடைய வியூகத்தை வகுப்போம்" என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறியுள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust