76 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வர பயன்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது
சமீபத்தில் 36 ஆண்டு பழைய ராயல் என்ஃபீல்டு பில் ஒன்று இணையத்தில் வைரலானது. அதே போல 37 ஆண்டுகளுக்கு முன் செயல்பட்ட ஒரு உணவகத்தின் பில்லும், அதில் இருந்த உணவின் விலைப்பட்டியலும் இணையத்தின் கவனத்தை பெற்றது.
அதன் வரிசையில், 76 ஆண்டு பழைய ரயில் பயணச்சீட்டு ஒன்று தற்போது நெட்டிசன்ஸை ஈர்த்துள்ளது.
இந்த பயணச்சீட்டானது, பாகிஸ்தானின் ராவல்பிண்டியிலிருந்து இந்தியாவின் அம்ரித்சருக்கு 17-09-1947ல் பயணித்தவர்களுடையது. அதில் 9 பேருக்கான பயணக்கட்டணம் குறிப்பிடப்பட்டிருந்தது.
டிக்கெட்டின் விலை, 9 பேருக்கு வெறும் 36 ரூபாய் 9 அணா மட்டுமே. எனில், கணக்கிட்டால், ஒருவரது பயணக்கட்டணம் 4 ரூபாய் ஒரு அணா பைசா
PakRailovers என்ற முகநூல் பக்கத்தில் இந்த புகைப்படம் பகிரப்பட்டிருந்தது. 1947 ஆண்டு செப்டம்பர் தேதி குறிப்பிடப்பட்டுள்ளதை வைத்துப் பார்க்கும்போது, இந்தியா பிரிட்டிஷ் காலனிய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முக்கியமாக இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளாக பிரிந்த பிறகு. ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் இந்தியாவிற்கு குடிபெயர்ந்திருக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது
புகைப்படம் பகிரப்பட்டதிலிருந்து இணையவாசிகள் பலரும், தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனை அரிய பொக்கிஷம் என்று கூறி பாதுகாக்கச் சொல்லி வருகின்றனர்.
மேலும் இதுபோன்று தங்களுக்கு கிடைத்த பழைய பொருட்கள் குறித்தும், அதன் கதை மற்றும் மதிப்பு குறித்தும் கமென்ட்டுகளில் பகிர்ந்து வருகிறது இணைய சமூகம்.
ஒரு சிலர் இந்த டிக்கெட்டை பார்த்துவிட்டு, 75 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அதன் தன்மை மாறாமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது என்றும் கூறி வருகின்றனர். இதனால், அந்த பயணச்சீட்டை லாமினேட் செய்து வைக்குமாறும் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust