Rakhi  Canva
இந்தியா

Raksha Bandhan 2022 : இந்த ராக்கியின் விலை 5 லட்சம் ரூபாய் - அப்படி என்ன ஸ்பெஷல்?

Keerthanaa R

ரக்ஷா பந்தன் 2022:

இந்தியா முழுவதும் இன்று ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்டு வருகிறது. சகோதரத்துவத்தை போற்றும் விதமாக, இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. முக்கியமாக அண்ணன் - தங்கை, அக்கா தம்பிகளுக்கு இடையேயான உறவை போற்றி கொண்டாடப்படும் இந்த பண்டிகை, முதலில் வட இந்தியர்களால் பின்பற்றப்பட்டாலும், தற்போது எல்லோரும் இந்த தினத்தை அனுசரிக்கத் தொடங்கிவிட்டனர்.


ரக்ஷா பந்தன் எப்போது கொண்டாடப்படும்?

ரக்ஷா பந்தன் வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் கொண்டாடப்படும். இத்தினத்தன்று, பெண்கள் தங்கள் சகோதரர்களின் கையில் ராக்கி என்றழைக்கப்படும் புனித கயிறு ஒன்றை கட்டி விடுவர். நெற்றியில் திலகமிட்டு மலர் தூவி அவர்களிடம் ஆசியும் பரிசும் பெறுவர். ராக்கி கட்டிய தன் சகோதரிக்கு அரணாக இருப்பேன் என்று சகோதரர்கள் கொடுக்கும் ஒரு மறைமுக உறுதிமொழியும் கூட!

ராக்கி கயிறு

இந்த ரக்ஷா பந்தன் பண்டிகைக்காகவே பிரத்தியேகமாகப் புனித கயிறுகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. காலத்திற்கு ஏற்றவாறு இதன் வடிவமைப்பு மேம்பட்டுக் கொண்டே இருந்தது. மரபின் படி பட்டு நூலினால் ஆன கயிறுகளைத் தான் பெண்கள் தங்களது சகோதரர்களுக்குக் கட்டிவிடுவர்.

காலப்போக்கில் மாறும் டிசைன்ஸ்

மெல்ல மெல்ல இதன் டிசைன்கள் மாற துவங்கின. முதலில் மணிகள், முத்துகள் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்ட ராக்கி கயிறுகள் பிரபலமாக இருந்தன. அதன் பின்னர் தங்கம், வெள்ளி போன்றவை இழைக்கப்பட்டவைகளாக வந்தன. காலப்போக்கில், முழுவதுமே தங்கம், வெள்ளி அல்லது பிளாட்டினத்தால் ஆன ராக்கிகள் வந்தன. தற்போது நமக்கும் நம் சகோதரருக்கும் இருக்கும் நீங்கா நினைவுகளின் புகைப்படங்கள் பொருத்தப்பட்ட ராக்கி கயிறுகள் கூட சந்தைக்கு வந்துவிட்டன.

ஒரு ராக்கி 5 லட்சம் ரூபாய்

ராக்கி கயிறுகளின் விலை பத்து ரூபாயில் தொடங்கி ஆயிரக்கணக்கில் விற்கப்படும். எனினும் அதை வாங்க நம் நாட்டு தங்கைகளும் அக்காக்களும் தயங்குவதில்லை. அந்த வகையில், சூரத் நகரில் விற்கப்படும் ஒரு ராக்கியின் விலை 5 லட்சம் ரூபாய்.

அப்படி லட்சக்கணக்கில் விலை கூறப்படும் இந்த ராக்கி கயிற்றில் என்ன ஸ்பெஷல்?

இந்த ராக்கி தங்கத்தினால் செய்யப்பட்டு, நடுவில் வைர கற்கள் பதியப்பட்டிருக்கிறது. இதில் ஓம் என்ற வார்த்தை எழுதப்பட்டிருக்கும். மேலும் இதை ரக்ஷா பந்தன் அன்று மட்டுமே அணிய முடியும் என்பதில்லை. மற்ற நாட்களிலும் ஒரு பிரேஸ்லெட் போல அணியலாம்.

குஜராத்தின் சூரத்தில் அமைந்துள்ள இந்த கடையில் 400 ரூபாய் முதல் 5 லட்சம் வரை மதிப்புள்ள ராக்கிகள் கிடைக்கும். ஒவ்வொரு வருடமும் இந்த ரக்ஷா பந்தன் பண்டிகையை வித்தியாசமானதாகவும் நினைவில் நிற்கும் ஒன்றாகவும் மாற்ற இது போன்ற புதிய முயற்சிகள் செய்து வருவதாக கடை உரிமையாளர் தீபக் சோக்சி கூறினார்.

இன்று ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுவதையொட்டி, பெண்கள் அட்டாரி- வாகா எல்லையிலுள்ள ராணுவ வீரர்களுக்கு ராக்கி கயிறு கட்டிவிட்ட சம்பவம், பார்ப்பவர்களை மனம் நெகிழச் செய்துள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?