VIK. series Twitter
இந்தியா

Rapido ஓட்டும் IMDb 9.2 ரேட்டிங் பெற்ற வெப்சீரிஸ் இயக்குநர் - நெஞ்சை உருக்கும் உண்மை கதை

Keerthanaa R

உலகில் அரும்பெரும் சாதனைகள், வெற்றிகளைக் கொண்டவர்கள் மிக சாதாரணமான இடத்திலிருந்து தான் தங்கள் பயணத்தை துவங்கியிருப்பார்கள். அப்படிதான் இங்கும் ஒரு இளைஞர், ராபிடோ ஓட்டுநராக இருந்துக்கொண்டு, வெப் சீரீஸ் ஒன்றை எழுதி இயக்கியுள்ளார். இந்த தொடர் 15 ஃபிலிம் ஃபெஸ்டிவல்களில் வெற்றிக்கண்டுள்ளது.

பராக் ஜெயின் என்ற இளைஞர் அலுவலகத்திற்கு செல்வதற்காக ராப்பிடோ பைக் ஒன்றை புக் செய்துள்ளார். அப்போது அவரை பிக் அப் செய்ய வந்த இளைஞர் எங்கு செல்லவேண்டும் எனக் கேட்டபோது, சேரும் இடத்தை பராக் கூறினார்.

இவ்வாறாக துவங்கிய இவர்களது உரையாடலின் முடிவில், தன்னை கூட்டிசெல்ல வந்த இளைஞர் ஒரு மினி வெப் சீரீஸை எழுதி இயக்கியுள்ளது தெரியவந்தது.

விக்னேஷ் நாகபுஷணம் என்ற அந்த இளைஞர் முன்பு வீ ஒர்க் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாகவும், சீன செயலிகளை தடைசெய்ததால், தனது வேலை பறிபோனதாகவும் தெரிவித்தார். மேலும் கொரோனா பெருந்தொற்று காரணமாக வேலை எதுவும் அதன் பின்பு அவருக்கு கிடைக்கவில்லை.

விக்நேஷுக்கு நீண்ட நாட்களாக இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதனால் தான் சேமித்து வைத்திருந்த தொகையை பயன்படுத்தி ஒரு மினி வெப் சீரீஸை இயக்கியுள்ளார் விக்னேஷ். VIK. எனப் பெயரிடப்பட்ட இந்த தொடரில், கதாநாயகன் ஒரு தனியார் உளவாளி. முற்றிலும் மர்மமான, தடயங்கள் எளிதில் புலப்படாத, கழுத்தை நெறிக்கும் ஒரு ஆபத்தான கேஸை கையில் எடுக்கிறார் இந்த டிடெக்டிவ்.

கேஸை முடிக்கிறாரா? தன்னை சுற்றியிருக்கும் ஆபத்துகளிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பது தான் கதை! யூடியூபில் மட்டுமே இருக்கும் இந்த தொடர் ஒரே ஒரு சீசன் தான். மொத்தம் ஐந்து எபிசோட்கள் கொண்ட இத்தொடர் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியானது. யூடியுபை தவிர வேறு எந்த தளத்திலும் இந்த சீரீஸ் இல்லை.

ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த தொடர், கிட்ட தட்ட 15 ஃபிலிம் ஃபெஸ்ட்களில் வென்றுள்ளது. IMDb இத்தொடருக்கு கொடுத்துள்ள ரேட்டிங் 9.2. இந்த ரேட்டிங் அவ்வளவு எளிதாக எந்த தொடருக்கோ, திரைப்படத்துக்கோ IMDb கொடுத்துவிடாது.

இந்த சுவாரஸ்ய கதையை தனது டிவிட்டர் பக்கத்தில் பராக் பகிர, விக்னேஷுக்கு பாராட்டு மழை பொழிந்து வருகிறார்கள் நம் இணையவாசிகள்.

தன் டிவிட்டர் பக்கத்தில் பராக் அந்த மினி வெப் சீரீஸின் லிங்க்கை பகிர்ந்திருந்தார்.

நிதி நெருக்கடியை எதிர்கொள்ள ராப்பிடோ ஓட்டுநராக பணியாற்றிவருவதாகத் தெரிவித்த விக்னேஷ், இந்த விஷயம் தன் தாய்க்கு தெரியாது என்றும் கூறினார். தற்போதும் ராபிடோ ஓட்டுநராக பணியாற்றி வரும் இவர், புதிய ப்ராஜெக்ட்களில் வேலை செய்ய காத்திருப்பதாகவும், ஆர்வமுள்ளவர்கள் விக்னேஷை தொடர்புகொள்ளுங்கள் என்றும் பராக் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஆனால், ஓடிடி தளங்களிலிருந்து இவருக்கு வாய்ப்புகள் வந்த்போது அவர் அதை மறுத்துவிட்டதாக பராக் தெரிவித்தார்

விக்னேஷின் தொலைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, இன்ஸ்டாகிராம் ஐடி போன்றவற்றையும் அந்த பதிவில் பராக் பதிவிட்டிருந்தார். இந்த விஷயம் படிப்பவர்களை மனம் நெகிழச் செய்துள்ளது. இந்த வீ ஒர்க் நிறுவனத்தில் தான் பராக் ஜெயின் தற்போது வேலை செய்து வருகிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?