Clouded Leopard

 

Facebook

இந்தியா

நாகாலாந்து மலைக்காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டது பெரிய புள்ளி சிறுத்தை

Antony Ajay R

உலகின் அழிந்து வரும் உயிரினங்களில் சிகப்பு பட்டியலில் இருக்கும் உயிரினம் பெரிய புள்ளி சிறுத்தைப் புலி. இதனைக் காண்பது மிக அரிது. இந்தியாவில் சொற்ப எண்ணிக்கையில் இருக்கும் இந்த விலங்கு சமீபத்தில் மிக அசாத்தியமான இடத்தில் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

நாகாலாந்தில் முதன் முறையாகப் பெரிய புள்ளி சிறுத்தைக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் கடல் மட்டத்திலிருந்து 3700 மீட்டர் உயரத்தில். பொதுவாக இந்த வகை உயிரினங்கள் கடல் மட்டத்தில் உயரம் குறைந்த பசுமை மாறா காடுகளில் மட்டுமே காணப்படும். Cat News - Winter 2021 எனும் இதழில் இந்த பெரிய புள்ளி சிறுத்தை புலியைக் கண்டறிந்த ஆய்வு வெளியாகியிருக்கிறது.

Clouded Leopard என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. மரம் ஏறும் தன்மை கொண்ட இதன் உடலில் இருக்கும் புள்ளிகள் சாதாரண சிறுத்தைகளை இதன் உடல் சிறிதாக இருந்தாலும் புள்ளிகள் பெரிதாக இருப்பதால், இதனைப் பெரிய புள்ளி சிறுத்தை என அழைக்கின்றனர். அடர் மஞ்சள் ரோமங்களில் கருநிற புள்ளிகள் வானில் மேகங்களைப் போல இருப்பதால் ஆங்கிலத்தில் க்ளவுடட் லெபார்ட் என அழைக்கப்படுகின்றன.

Clouded Leopard

Wildlife Protection Society of India

நாகாலாந்து மாநிலம் மியான்மார் எல்லையில் இருக்கிற சாராமதி மலைத்தொடரில் இந்த வகை சிறுத்தைகள் சில வசிப்பது புகைப்பட ஆதாரத்துடன் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அங்கு Wildlife Protection Society of India எனும் அமைப்பு ஒரு ஆய்வினை மேற்கொண்டது.
நாகாலாந்து மாநிலம் மியான்மார் எல்லையில் இருக்கிற சாராமதி மலைத்தொடரில் இந்த வகை சிறுத்தைகள் சில வசிப்பது புகைப்பட ஆதாரத்துடன் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அங்கு Wildlife Protection Society of India எனும் அமைப்பு ஒரு ஆய்வினை மேற்கொண்டது.

கிழக்கு நாகாலாந்து, கிபிர் மாவட்டத்தில் தன்மிர் கிராமத்தில் நாகாலாந்து சாராமதி மலைத்தொடரின் மிகப்பெரிய மலைச்சிகரம் அமைந்திருக்கிறது. 65 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அந்த கிராமத்தில் ஆராய்ச்சி குழு அமைத்த கேமராவில் பெரிய புள்ளி சிறுத்தைகள் தென்பட்டிருக்கின்றன. இதனை வெற்றிகரமாக செயல்படுத்த தன்மிர் கிராம மக்களும் உதவியுள்ளனர். உள்ளூர் வாசிகள் ஐந்து பேரை உள்ளடக்கிய குழு ஜனவரி - ஜூன் 2020 -ல் சில கேமரக்களும், ஜூலை - செப்டம்பர் 2021-ல் சில கேமராக்களும் என 50க்கும் மேற்பட்ட படக்கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

வனக்காவல் புரியும் மக்கள்

கேமராக்களில் இரண்டு பெரிய சிறுத்தைப் புலிகளும் இரண்டு குட்டி சிறுத்தைப் புலிகளும் தென்பட்டுள்ளன. அருணாச்சல பிரதேசத்தில் பணிபுரியும் ஒரு பாதுகாப்பு மானுடவியலாளரும், WPSI முன்முயற்சியின் ஆலோசகருமான நிஜவான், “இந்த வகை சிறுத்தைப் புலிகளைப் பற்றி அதிக தரவுகள் இல்லை. இவை பொதுவாக மரங்கள் அடர்ந்த காடுகளில் மட்டுமே காணப்படும்” எனக் கூறினார். “இதுவரை இந்த பெரிய புள்ளி சிறுத்தைப் புலிகள் சிக்கிம் (3,720 மீ), பூட்டான் (3,600 மீ) மற்றும் நேபாளம் (3,140 மீ) உள்ளிட்ட மாநில-பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் உள்ளன. ஒரு சமூக காட்டில் இவை வசிப்பது மிக அரிதானது. சட்டத்தால் பாதுகாக்க முடியாத பல்லுயிர் தன்மையை இந்த உள்ளூர் மக்கள் பாதுகாக்கின்றனர். அவர்கள் இங்கு வசிக்கின்றனர், இங்கு இனப்பெருக்கம் செய்கின்றனர், இந்த காடு அவர்களுக்கான உணவை வழங்குகிறது” எனவும் கூறினார்.

Nagaland

மேலும், “நாட்டின் எல்லா காடுகளும் சட்டத்தால் பாதுகாப்பாகிறது. ஆனால் வடகிழக்கு பகுதியில் உள்ள காடுகள் அங்குள்ள மக்களால் பாதுகாக்கப்பட வேண்டியவை. அவர்கள் வாழ்வதற்காக இந்த காட்டை பயன்படுத்துகின்றனர். அத்துடன் இந்த காட்டின் பல்லுயிர் தன்மையையும் காக்கின்றனர்”

தன்மீர் கிராம மக்கள் பெரிய புள்ளி சிறுத்தைப் புலியை “கேபக்” என அழைக்கின்றனர்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?