Ratan Tata  Newssense
இந்தியா

Ratan Tata : உலகம் கொண்டாடும் இந்தியர் - டாடாவிடம் இருக்கும் சில பொக்கிஷங்கள் பட்டியல்

NewsSense Editorial Team

இந்திய தொழில்துறையில் டாடா குழுமம் நம்பர் 1 இடத்தில் இல்லை. டாடா குடும்பத்தைச் சேர்ந்த எவரும் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் டாப் இடங்களில் இல்லை.

ஆனால் இன்று வரை டாடா குழுமத்தை நீக்கிவிட்டு இந்திய பொருளாதார வரலாற்றையோ, இந்திய தொழில்துறையின் கதைகளையோ பேச முடியாது. அந்த அளவுக்கு இந்தியாவோடு டாடாக்களின் பங்களிப்பு பின்னிப் பிணைந்திருக்கிறது.

அப்பேற்பட்ட டாடா குழமத்தின் பிதாமகனாக தற்போது ரத்தன் டாடா இருக்கிறார். டாடா குழுமத்தின் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடாமல், ஒரு வழிகாட்டியாக மட்டும் இருந்து வரும் ரத்தன் டாடா வைத்திருக்கும் சில காஸ்ட்லி பொருட்கள் & சொத்துக்களை எம் எஸ் என்.காம் வலைதளம் பட்டியலிட்டு இருக்கிறது.

1. ஃபெராரி கலிஃபோர்னியா:

டாடா இண்டிகா மூலம், இந்தியாவை கார் உற்பத்தி கேந்திரங்களில் ஒன்றாக உருவாக்கிய ரத்தன் டாடாவுக்கு கார்கள் என்றால் ரொம்பப் பிடிக்கும். அவரிடம் சிவப்பு நிற ஃபெராரி கலிஃபோர்னியா கார் ஒன்று இருக்கிறது.

4.3 லிட்டர் வி8 இன்ஜின் கொண்ட அந்த கார் சுமார் 552 குதிரைத் திறனை வெளிப்படத்தக் கூடியது.

7 கியர்களைக் கொண்ட டி சி டி கியர் பாக்ஸ் உடன் இயங்கும் அந்த சிவப்பு ராட்சனை ஓட்டினால் கிடைக்கும் சுகத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. இந்த காரை அவ்வப்போது ரத்தன் டாடா ஓட்டுவதைப் போல சில புகைப்படங்கள் வெளியாகும்.

2. தசால்ட் ஃபால்கன் பிரைவேட் ஜெட்

ரத்தன் டாடா தனக்கென சொந்தமாக தசால்ட் ஃபால்கன் 2000 ரக இரட்டை இன்ஜின் கொண்ட ஜெட் ஒன்றை வைத்திருக்கிறார். அதோடு அந்த விமானத்தை தானே ஓட்டுவதற்கும் தேவையான ஓட்டுநர் உரிமத்தை வைத்திருப்பதாக சில வலைதளங்களில் பார்க்க முடிகிறது. எல்லா பெரும் பணக்காரர்களும் வைத்திருப்பதைப் போல இந்த விமானம் சாதாரணமாக கிடைக்காதாம். பல திறமையான பிரான்ஸ் நாட்டு நிபுணர்கள் இணைந்து பிரத்யேகமாக உருவாக்கிய அல்லது பல்வேறு மாற்றக்கள் செய்யப்பட்ட ஜெட்டைத் தான் ரத்தன் டாடா வைத்திருக்கிறாராம்.

3. சீசைட் மும்பை பங்களா

மும்பை நகரத்தில் கொலாபா பகுதியில், அரபிக் கடலோரத்தை அனுஅனுவாக ரசிக்கும் வகையில் கட்டப்பட்டிருக்கும் பங்களா ஒன்றில் ரத்தன் டாடா வசிப்பதாகவும், அது சுமார் 15,000 சதுர அடி பறந்து விரிந்த பங்களா என்றும் கூறப்படுகிறது.

infinity pool என்றழைக்கப்படும் சொகுசு நீச்சல் குளம் , சூரிய குளியல் எடுக்க பிரத்யேக இடம், திரைப்படங்களைக் கண்டு களிக்க சினிமா தியேட்டர் போன்ற அறை, சுமார் 10 கார் வரை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி என அதன் பிரமாண்டத்தை சொல்லிக் கொண்டே போகலாம்.

4. Maserati Quattroporte

ட்வின் டர்போ வி6 இன்ஜின் கொண்ட Maserati Quattroporte காரால் 580 என் எம் டார்க் சக்தியை வெளிப்படுத்த முடியும். 424 குதிரைத் திறனோடு இயங்கும் இந்த கார் உச்சபட்சமாக 270 கிமீ வேகத்தில் பயணிக்கக் கூடியது. சுமார் ஒரு லட்சம் அமெரிக்க டாலர் விலை கொண்ட இந்த காரை ரத்தன் டாடா வைத்திருக்கிறார்.

5. லேண்ட் ரோவர் ஃப்ரீலேண்டர்

ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம்.

ஆனால் லேண்ட் ரோவர் நிறுவனத்தை டாடா குழுமம் வாங்குவதற்கு முன்பே லேண்ட் ரோவர் ஃப்ரீலேண்டர் காரை வாங்கிவிட்டார் ரத்தன் டாடா.

6 ஸ்பீட் கியர் பாக்ஸ் கொண்ட இந்த ராட்சஸ மாமனுக்கு ரத்தன் டாடாவோடு இப்படி ஒரு பந்தம் வேறு இருக்கிறதாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?