Ratan Tata NewsSense
இந்தியா

Ratan Tata: மகிழ்ச்சியின் ரகசியத்தை பகிர்ந்த டாடா - இணையத்தில் வைரலாகும் வீடியோ

Keerthanaa R

ும்டாடா குழும நிறுவனர் ரத்தன் டாடா, தன் வாழ்வின் மிக பெரிய மகிழ்ச்சி எதுவென்று பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று இணையவாசிகளை கவர்ந்துள்ளது. 

இந்திய இளைஞர்கள் மனதை கவர்ந்த பெரும்புள்ளிகளில் ஒருவர் ரத்தன் டாடா. இவரது வாழ்க்கைப் பயணம், அவ்வப்போது இவர் பகிர்ந்துகொள்ளும் கதைகள், தத்துவங்கள் மில்லினியல்களுக்கு மிகப் பெரிய ஊக்கம். ஆங்கிலத்தில் கூறப்படும், Man with Zero Haters என்ற வாசகம் இவருக்கு கச்சிதமாக பொருந்தும். 

அந்த வகையில், சமீபத்தில் ரத்தன் டாடா பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அதில் அவர், "என் வாழ்வில் எனக்கு மிகப் பெரிய சந்தோஷமே, ஒருவர் ஒரு காரியத்தை செய்ய முடியாது என்று சொன்னால், அதை செய்து காட்டுவது தான்" என பேசியிருந்தார். 

இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டதிலிருந்து 51 ஆயிரத்துக்கும் மேலான பார்வைகளை பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல், பலரும் ரத்தன் டாடா நல்ல மனிதர் என்றும், அவர் வளர்ச்சி குறித்தும் கமென்ட் செய்திருந்தனர். 

ரத்தன் டாடாவின் இந்த வீடியோவை தொழிலதிபர் ஹர்ஷ் கோயிங்கா தன் டிவிட்டரில் பகிர்ந்திருந்தார். 

ஒரு பயனர், " இவரை இந்தியாவின் இரும்பு மனிதர் என்று சொன்னால், அதுவும் குறைவே. அவர் அற்புதமான மனிதர்." என்றும், அவரிடம் இருந்து தான் ஒரு விஷயத்தை எப்படி முடிக்கவேண்டும் என கற்றுகொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?