Konark Sun Temple
Konark Sun Temple NewsSense
இந்தியா

கோனார்க் கோவில் சூரியக் கோயில் சிறப்புகள் என்ன? - அட்டகாச தகவல்கள்

Govind

ஒடிசா மாநிலத்தின் கொனார்க்கில் புகழ் பெற்ற சூரிய கோவில் உள்ளது. இது 1984இல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது. தற்போது இந்திய தொல்லியல் துறை சூரியக் கோவிலை மறுசீரமைத்து வருகிறது. 2021 ஆம் ஆண்டில் தொடங்கிய பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் முடியும். கோவிலின் ஜக்மோகன் மண்டபம் அல்லது சபை மண்டபம் புதிதாக செதுக்கப்பட்ட கற்களால் புதுப்பிக்கப்பட்டது.

கோனார்க்கில் உள்ள சூரியக் கோயிலின் சிறப்பு என்ன?

கிபி 1250ஆம் ஆண்டு கங்கை ஆட்சியாளரான முதலாம் நரசிம்ம தேவர் இக்கோவிலைக் கட்டினார். கோனார்க் என்ற வார்த்தையில் இரண்டு வார்த்தைகள் உள்ளன. கோனா என்றால் மூலை. அர்கா என்றால் சூரியன். அர்க் ஷேத்திரத்தில் வணங்கப்படும் சூரியக் கடவுளே கொனார்க் என்று அழைக்கப்படுகிறது.

கோண்டலைட் என்பது ஒரு தழை உருமாற்ற பாறை. இந்தியாவில், இது பெஸ்வாடா க்னீஸ் மற்றும் கைலாச க்னீஸ் என்றும் அழைக்கப்படுகிறது. ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் கோண்ட் பழங்குடியினரின் பெயரால் இது பெயரிடப்பட்டது. ஏனெனில் கிழக்கு இந்தியாவின் இந்த பகுதிகளில் பழங்குடி வசிக்கும் மலைகளில் இப்பாறைகள் காணப்படுகின்றன.

கோண்டலைட் பாறைகளால் ஆன இந்தக் கோவில் சூரியக் கடவுளின் தேரைக் குறிக்கிறது. 12 ஜோடி சக்கரங்கள் 7 குதிரைகள் வரையப்பட்டு சொர்க்கத்தில் இந்தத் தேர் பயணிப்பதாக ஐதீகம்.

அசல் கோவில் 70 மீட்டர் உயரத்திலிருந்தது. ஆனால் அது கீழே விழுந்துவிட்டது. பார்வையாளர் மண்டபம் சுமார் 30 மீட்டர் உயரம் கொண்டது. தற்போது நடன மண்டபம் (நாத மந்திரா) மற்றும் உணவருந்தும் மண்டபம் (போக மண்டபம்) ஆகியவை இந்தக் கோவிலின் இடிபாடுகளில் தப்பியவை.

சமகால வாழ்க்கை மற்றும் செயல்பாடுகள், சிங்கங்கள், இசைக்கலைஞர்கள், நடனக் கலைஞர்கள் மற்றும் வாழ்வியல் குழுக்களின் நேர்த்தியான உருவப்படங்களுடன் கோவில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

பிளாக் பகோடா என்று அழைக்கப்படும் கோனார்க் கோவில் கோபுரம் கடலில் பயணம் செய்யும் மாலுமிகளுக்கு ஒரு கலங்கரை விளக்கம் போல பயன்பட்டது. சூரிய உதயத்தின் முதல் கதிர்கள் பிரதான நுழைவாயிலில் விழும் வண்ணம் கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சூரிய வழிபாட்டு முறை என்பது 8ஆம் நூற்றாண்டில் காஷ்மீரில் தோன்றி கிழக்கு இந்தியாவின் கடற்கரையை வந்தடைந்த ஒரு வழிபாட்டு முறையாகும். சூரிய வழிபாட்டு முறையின் வரலாறு மற்றும் பரவலால் இக்கோவில் உருவாகியது.

மறுசீரமைப்பு தொடர்பான சர்ச்சை

2018ஆம் ஆண்டில் இந்திய தொல்லியல் துறை கோவிலின் வெளிப்புற மேற்பரப்பில் உள்ள கல் சிற்பங்களை வெற்று கற்களால் மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது. 40% கலைநயமிக்க கல் சிற்பங்கள் வெற்று கற்களால் மாற்றப்பட்டதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன.

உலக பாரம்பரிய தளங்களின் வழிகாட்டுதல்களை இந்திய தொல்லியல் துறை பின்பற்றவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது. அசல் கல் தொலைந்ததால் அதை மீண்டும் செய்ய முடியாது. இருப்பினும் இந்திய தொல்லியல் துறை இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

ஆங்கிலேய அரசு கோவிலில் மணலை நிரப்பியது

1903ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் ஜக்மோகன் எனப்படும் சபை மண்டபத்தில் மணல் நிரப்பி கோவிலை பாதுகாக்க சீல் வைத்தனர். இருப்பினும் உள்ளே பெரிய அளவுக்கு மணல் இருந்ததால் கோவில் கட்டமைப்பில் விரிசல்களை ஏற்படுத்தின.

இதனால் இந்த மணலை அகற்ற இந்திய தொல்லியல் துறை திட்டமிட்டது. 2020ஆம் ஆண்டில் "சூரியக் கோவிலின் பாதுகாப்பு" குறித்த தேசிய மாநாடு நடைபெற்றது. அங்கு மத்திய கலாச்சார அமைச்சர் பிரஹலாத் சிங் படேல்,” அனைவரும் கோவிலிலிருந்து மணல் அகற்றப்படுவதைக் காண காத்திருக்கிறார்கள். கோவில் இன்னும் 500 முதல் 700 ஆண்டுகளுக்கு அங்கேயே இருக்க வேண்டும். மணல் அள்ளும் முறைகள் குறித்து அறிக்கை தயாரிக்குமாறு இந்தியத் தொல்லியல் துறையிடம் கேட்டுள்ளேன்" என்று பேசினார்.

Konark Temple

இந்தியத் தொல்லியல் துறையில் தொல்பொருள் ஆய்வாளரான அருண் மாலிக் ஊடகங்களிடம் கூறுகையில், இந்த கோவில் 1936ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்றார். மேலும் 1986 வரை கோவிலின் கட்டமைப்பைப் பாதுக்காப்பாக வைத்திருக்க வெற்று கற்கள் வைக்கப்பட்டன. இது 1915இல் தீர்மானிக்கப்பட்ட கொள்கையின் படி செய்யப்பட்டது.

கோவிலின் மறுசீரமைப்பு குறித்த புதிய கொள்கை

2014இல் இந்தியத் தொல்லியல் துறை புதிய பாதுகாப்புக் கொள்கையை கொண்டு வந்தது. வரலாறு மற்றும் நம்பகத்தன்மை இருந்தால் மட்டுமே புராதான கட்டமைப்பு ஒன்றின் அழிக்கப்பட்ட பகுதிகளை மீட்டெடுப்பதற்கும் மறு உருவாக்கம் செய்வதற்கும் புதிய கொள்கை அனுமதிக்கிறது.

இந்த புதிய பாதுகாப்பு கொள்கை "அதிக கட்டிடக்கலை மதிப்புள்ள நினைவுச்சின்னங்களில் சமீபத்தில் சேதமடைந்த சில பகுதிகளில் மட்டுமே மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படலாம்" என்று கூறுகிறது.

ரூர்க்கியில் உள்ள மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கோவிலின் கட்டமைப்பு உறுதித்தன்மையை ஆய்வு செய்வதற்காக ஒரு அறிவியல் ஆய்வு நடத்தியது. மறுசீரமைப்பின் போது இந்த ஆய்வு இந்திய தொல்லியல் துறைக்கு உதவும்.

2019ஆம் ஆண்டில் கோவிலில் உள்ள கற்களை ஆய்வு செய்வதன் மூலம் திட்டத்தின் முன்னோட்டம் தொடங்கியது. உள்ளூர் கைவினைஞர்கள் மறுசீரமைப்பிற்கான பணிகளில் ஈடுபட்டனர். அவர்களுக்கு தேவைப்படும் கோண்டலைட் கற்கள் தபாங்கிலிருந்து கொண்டு வரப்பட்டன.

எப்படியோ இந்த 800 ஆண்டு பழமையான கோவில் பாதுகாக்கப்பட்டால் சரி!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?