Royal Enfield 350 Twitter
இந்தியா

Royal Enfield 18,700 ரூபாய் தானா? இணையத்தில் வைரலாகும் 36 வருட பழைய பில்!

Priyadharshini R

ராயல் என்ஃபீல்டு பலவிதமான கிளாசிக் பைக்குகளை உற்பத்தி செய்கிறது.

இந்தியாவின் மிகவும் பிரபலமான மோட்டார் சைக்கிள்களில் ஒன்றாக ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 உள்ளது.

இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 இன்று ரூ.1.5 லட்சத்தில் தொடங்குகிறது. ஆனால் புல்லட் 350 ஒரு காலத்தில் 18,700 ரூபாய்க்கு கிடைத்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?

ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 பைக்கின் பழைய பில்லில் ரூ.18,700 என அச்சிடப்பட்டிருந்த விலையை பார்த்த ரசிகர்கள் அசந்து போனார்கள்.

இந்த பில் தற்போது பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இணையத்தை சுற்றி வரும் பில்லில் அதன் தேதி 1986 ஆம் ஆண்டு எனக் குறிப்பிடுகிறது. வைரலாகி வரும் இந்த புகைப்படத்தில் சுமார் 36 ஆண்டுகள் பழமையான ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 -ன் பில்லை நீங்கள் பார்க்கலாம்.

1986 ஆம் ஆண்டில், ராயல் என்ஃபீல்டு "என்ஃபீல்டு புல்லட்" என்று அழைக்கப்பட்டது. இது ஒரு நம்பகமான மோட்டார் பைக்காக அறியப்படுகிறது. இது இந்திய இராணுவ எல்லைகளில் ரோந்து பணியில் பயன்படுத்தப்பட்டது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விரைவில் 650சிசி புல்லட்டை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராயல் என்ஃபீல்டு புல்லட்கள் முன்பு 350- மற்றும் 500-சிசி எஞ்சின்களைக் கொண்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?