பைக் பிரியர்களின் முதல் தேர்வாக இருப்பது இந்த ராயல் என்ஃபீல்டு தான்.
ஹெல்மட்டை மாட்டிகொண்டு ராயல் என்ஃபீல்டு ஓட்டும்போது நாமதான் ராஜா என்ற நினைப்பு வந்துவிடும்.
முக்கியமாக கெளதம் மேனன் படங்களில் காதல் காட்சி தொடங்கி சண்டை காட்சி வரை ராயல் என்ஃபீல்டு இருக்கும். இவ்வாறு பல ஆண்களின் தோழனாக இருக்கும் ராயல் என்ஃபீல்டின் வரலாறு ஒரு போரில் தொடங்கியது என்றால் நம்ப முடிகிறதா? வாருங்கள் தெரிந்துகொள்வோம்
1892 ஆம் ஆண்டில், இங்கிலாந்தில் ஆல்பர்ட் ஈடி மற்றும் ராபர்ட் வாக்கர் ஸ்மித் ஆகியோரால் Eadie Manufacturing Company Limited தொடங்கப்பட்டது.
ஆரம்ப கட்டங்களில், இந்த நிறுவனம் ராயல் ஸ்மால் ஆர்ம்ஸ் ஃபேக்டரிக்காக துப்பாக்கிகளின் பல்வேறு பாகங்களை தயாரித்து வந்தது.
1896 ஆம் ஆண்டில், தி நியூ என்ஃபீல்ட் சைக்கிள் கம்பெனி லிமிடெட் என்ற பெயரில் ஈடி மேனுஃபேக்ச்சரிங் லிமிடெட்டின் புதிய துணை நிறுவனம் உருவாக்கப்பட்டது.
இந்த நிறுவனம் மிதிவண்டிகள் மற்றும் அதன் பாகங்களை உற்பத்தி செய்து வந்தது.
1893 - 1900 ஆண்டு வரை சைக்கிள், குவாட்ரி சைக்கிள், ட்ரை சைக்கிள் மற்றும் புல் வெட்டும் இயந்திரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. அப்போதெல்லாம் ராயல் என்ஃபீல்டு என்றால் `பைக்' என்று அறியப்படவில்லை.
1901 ஆம் ஆண்டில், மினெர்வா நிறுவனம் தயாரித்த மோட்டாரை அதன் மிதிவண்டியில் பொருத்தி நியூ என்ஃபீல்ட் சைக்கிள் நிறுவனம் தனது முதல் மோட்டார் சைக்கிளை தயாரித்தது.
1901 -ல் தான் தனது முதல் மோட்டார் சைக்கிளை உருவாக்கியது ராயல் என்ஃபீல்ட். அது 2.5bhp திறன் கொண்ட மோட்டார் சைக்கிளாகும்.
1903 ஆம் ஆண்டில், இந்த நிறுவனம் கார்களை உற்பத்தி செய்யத் தொடங்கியது.
அதன் பிறகு 1916 ஆம் ஆண்டு முதல் உலகப்போர் ஏற்பட்டது அப்போது சில வாகனங்கள், அதிக அளவில் துப்பாக்கிகளை எடுத்து செல்ல பயன்பட்டது.
பிறகு, துப்பாக்கிப் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை என்ஃபீல்டு அறிமுகம் செய்தது.
அதன்பின்னர் 1931 ஆம் ஆண்டு புல்லட் அறிமுகமானது. இது இரண்டாம் உலகப்போரின் போது முக்கிய பங்கு வகித்தது.
அப்போது 125சிசி, 250 சிசி, 350சிசி ஆகிய பைக்குகளை பிரிட்டிஷ் ராணுவ படைக்கு வழங்கியது .
இந்த நிலையில் தான் 1952 ஆம் ஆண்டு மெட்ராஸ் மோட்டார் நிறுவனமும் என்பீல்டு நிறுவனமும் இணைந்து மோட்டார் பைக்குகளை உருவாக்க ஒப்பந்தம் போட்டார்கள்.
அப்போது இந்திய அரசாங்கம், காவல்துறை மற்றும் ராணுவத்துறையில் உள்ள அதிகாரிகளுக்கு 800 மற்றும் 350 சிசி புல்லெட்டை அறிமுகம் செய்தனர்.
1958 ல் சென்னையில் உள்ள திருவொற்றியூரை தலைமையிடமாக கொண்டு தொடங்கிய என்ஃபீல்ட், இந்தியாவில் 91 இடங்களில் தனது விற்பனை மையத்தை தொடங்கியது.
1994 ஆம் ஆண்டு ஐச்சர் நிறுவனம் என்ஃபீல்ட் நிறுவனத்தை வாங்கி ராயல் என்பீல்ட் என பெயர் வைத்தது . அன்று முதல் இன்று வரை பல புதிய பைக்குகளை அறிமுகபடுத்தி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றது.
இன்றும் பைக் லவ்வர்கள் ராயல் என்ஃபீல்ட்டை ஸ்டார்ட் செய்யும்போது கேட்கும் சத்தம் தான், அவர்களுக்கும் பைக்குகளுக்கும் உள்ள காதல் கீதம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust