கவுன்சிலர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய கர்நாடக அமைச்சர் Twitter
இந்தியா

ஒரு லட்சம், தங்கம், வெள்ளி... கவுன்சிலர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய கர்நாடக அமைச்சர்!

Gautham

இணையம் எப்படி டிரெண்டை நோக்கி ஓடுகிறதோ, அப்படி அரசியலும் அரசியல்வாதிகளும் தொடர்ந்து டிரெண்டை நோக்கி தன்னை தகவமைத்துக் கொள்வார்கள்.ஒரு காலத்தில் வாக்குக்கு பணம் பெறுவதையோ, கொடுப்பதையோ சங்கடமான ஒன்றாகப் பார்த்த மக்கள், ஒரு கட்டத்தில் தங்கள் பகுதிக்கு காசு வரவில்லை என சாலையில் இறங்கி போராடிய வருத்தமான வரலாறு எல்லாம் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது.

அப்படி சமீபத்தில் ஒரு அமைச்சர், சக அரசியல்வாதிகளுக்கு தங்கம், வெள்ளி, ரொக்கம் அடங்கிய பரிசுப் பெட்டியைக் கொடுத்து ஒட்டுமொத்த இந்தியாவையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.

கர்நாடக மாநில அரசின் சுற்றுலாத் துறை அமைச்சராக இருக்கும் ஆனந்த் சிங் என்பவர், ஹொசபெடே தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகராட்சி உறுப்பினர்கள் மற்றும் 10 கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு ஒரு பரிசுப் பெட்டியைக் கொடுத்திருக்கிறார்.

அந்தப் பெட்டியில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், 144 கிராம் தங்கம், 1 கிலோ வெள்ளி, ஒரு பட்டுப் புடவை, ஒரு வேட்டி, உலர் பழங்கள் என திறந்து பார்த்தவர்களுக்கு தலை சுற்ற வைத்திருக்கிறது.

அவர் தொகுதியில் ஒரு நகராட்சியும் 35 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும், 10 கிராம பஞ்சாயத்தில் 182 உறுப்பினர்களும் இருக்கிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் சிலர், அமைச்சர் ஆனந்த் சிங்கின் பரிசுப் பெட்டியைத் திறந்து பார்த்துவிட்டு ஏற்றுக் கொள்ள மறுத்திருக்கிறார்கள். அடுத்த மே 2023-ல் கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் வர இருக்கிறது. அதை மனதில் வைத்து தான் அமைச்சர் இப்படி தீபாவளிப் பரிசுகளைக் கொடுக்கிறார் என சிலர் கருத்து கூறினர்.

ஆனால் அமைச்சர் ஆனந்த் சிங்கின் ஆதரவாளர்களோ அதெல்லாம் சுத்தப் பொய் என்றும், ஒவ்வொரு ஆண்டும், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பண்டிகை காலத்தில் அமைச்சர் ஆனந்த் சிங் பரிசுப் பொருட்களை அனுப்புவார், இது வாடிக்கையான ஒன்று தான், அன்பினாலும் நட்பினாலும் கொடுப்பதை இப்படி கொச்சைப்படுத்துகிறார்கள் என கூறியுள்ளனர்.

ஆனால், இணையவாசிகளில் பலரும் இதை எல்லாம் ஏற்றுக் கொள்வதாக இல்லை. ஒரு சுற்றுலாத்துறை அமைச்சரிடமே இத்தனை கோடி ரூபாய் பணம் இருக்கிறது என்றால், நிதி, பொதுப் பணித் துறை, போக்குவரத்துத் துறை போன்ற அமைச்சர்களிடம் எவ்வளவு இருக்கும் என கணக்கு போடுகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?