சம்பிரித்தி பட்டாச்சார்யா: இயற்பியலில் Fail-ஆன பெண் 'பறக்கும் படகை' உருவாக்கியது எப்படி? Twitter
இந்தியா

சம்பிரித்தி பட்டாச்சார்யா: இயற்பியலில் Fail-ஆன பெண் 'பறக்கும் படகை' உருவாக்கியது எப்படி?

பள்ளியில் படிக்கும் போதே சரியாக படிப்பு வராததால் "நீ நல்ல மனைவியாக இருக்க மட்டும் கத்துக்கிட்டா போதும்" என இவரது ஆசிரியர்கள் கூறியுள்ளனர். தன்னை சுற்றி ஊக்கமளிக்க யாரும் இல்லாத சூழலிலும் 20 வயதாக இருக்கும் போது சம்பிரித்தி தன் வாழ்க்கையைத் தானே வாழவேண்டும் என முடிவு செய்தார்.

Antony Ajay R

சம்பிரித்தி பட்டாச்சார்யா ஓர் இந்திய வம்சாவளிப் பெண். இவர் நேவியர் (Navier) என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இவரது நிறுவனம் மின்சார ஹைட்ரீஃபோயில் படகுடன் கடல்வழி போக்குவரத்தின் தலையெழுத்தை மாற்றிவருகிறது.

நேவியர் 30 என்ற வெற்றிகரமான படகை உருவாக்குக்கியிருக்கும் சம்பிரித்தி, கல்வியில் பின்தங்கியவராக இருந்துள்ளார். அமெரிக்காவில் இந்திய வம்சாவளியாக கலாச்சார சிக்கல்களை எதிர்கொண்டார். தேவையான பொருளாதாரம் இல்லாமல் இருந்துள்ளார். இந்த தடைகளைத் தகர்த்து வெற்றிகண்டுள்ள அவரது கதையைப் பார்க்கலாம்.

நேவியர் 30 என்ற படகுதான் சம்பிரித்தியின் சாதனையாக கருதப்படுகிறது. இது 30 மீட்டர் நீளமான மின்சாரத்தால் இயங்கக்கூடிய ஹைட்ரோஃபோயில் படகாகும்.

இது தண்ணீரின் மீது சறுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அலைகளில் திறம்பட செயல்படுகிறது. இதன் செயல்திறன் எரிபொருட்களில் இயங்கும் படகுகளை விட 10 மடங்கு அதிகம் என்கின்றனர்.

இதன் கீழ் பகுதியில் மூன்று விசிறிகள் சுற்றுகின்றன. போட் போதுமான அளவு வேகத்தில் செல்லும் போது இந்த விசிறிகள் படகை மேலே தூக்கிவிடுகின்றன.

இதனால் அதிவேகமாக அதே நேரத்தில் மென்மையாக பயணிக்க முடியும். பழங்காலத்து மாலுமிகள் போல அலைகளில் தத்தளிக்கும் நிலையே கிடையாது.

கடல்வழிப் போக்குவரத்து எதிர்காலத்தில் எவ்வளவு சிறப்பாக மாற்றம் காண முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது நேவியர் 30 படகு.

சம்பிரித்தி இந்த அற்புதத்தை படைக்கும் முன்னர் ஹைஸ்கூல் இயற்பியல் பாடத்தில் தோற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பிரித்தி கொல்கத்தாவில் பிறந்தவர். கொல்கத்தாவில் உள்ள ஒரு சிறிய கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார்.

பள்ளியில் படிக்கும் போதே சரியாக படிப்பு வராததால் "நீ நல்ல மனைவியாக இருக்க மட்டும் கத்துக்கிட்டா போதும்" என இவரது ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

தன்னை சுற்றி ஊக்கமளிக்க யாரும் இல்லாத சூழலிலும் 20 வயதாக இருக்கும் போது சம்பிரித்தி தன் வாழ்க்கையைத் தானே வாழவேண்டும் என முடிவு செய்தார்.

அதற்கு அவருக்கு பேருதவியாக இருந்தது இணையதளம். "இண்டெர்ன்ஷிப்" வேண்டும் என பல்வேறு நிறுவனங்களுக்கு மெயில் அனுப்பினார்.

மொத்தம் 540 மெயில்களில் 4 ரிப்ளை மட்டுமே வந்துள்ளது. 539 ரிஜக்‌ஷன்களுக்கு பிறகு ஒரு நிறுவனத்தில் இணைந்தார்.

சிகாகோவில் உள்ள ஒரு லேபில் ரிசர்ச் அசிஸ்டண்டாக பணியில் சேர்ந்தார். அப்போது தான் அவருக்கு அறிவியல் கைவந்தது. பள்ளியில் விட்ட படிப்பை அமெரிக்காவில் தொடர்ந்தார்.

இயற்பியலையும் பொறியியலையும் ஆராய்ந்தவர் அடுத்ததாக நாசாவில் இண்டெர்ன்ஷிப் மேற்கொண்டார். அமெரிக்காவில் ஓஹிஓ ஸ்டேட் பல்கலைக்கழத்தில் மேற்படிப்பை தொடர்ந்தார். எம்.ஐ,டி என்ற அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்.டி முடித்தார்.

20 வயதில் அவர் ஒரு நண்பரை சேர்த்துக்கொண்டார். அது தான் அவரது வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது. அந்த நண்பரின் பெயர் கடின உழைப்பு.

13 வருட கடின உழைப்பு அவருக்கு தன்னம்பிக்கையை வழங்கியது. தன்னம்பிக்கை 20 பேரை வேலைக்கு சேர்த்துக்கொண்டு ஒரு நிறுவனத்தை உருவாக்கும் வாய்ப்பை அளித்தது.

அந்த வாய்ப்பு தான் நேவியர் என்ற வெற்றிகரமான நிறுவனமாக உருவாகியிருக்கிறது. நேவியர் 30 ஒரு எலக்ட்ரிக் வாகனம் என்பதனால் கடலுக்கும் சுற்றுசூழலுக்கும் தீங்கு விளைவிக்காது.

எதிர்காலத்தில் டெஸ்லா கார் போல கடலில் ஓடும் ஒரு போட்டை உருவாக்கும் கனவுடன் இயங்குகிறார் சம்பிரித்தி பட்டாச்சார்யா!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?